தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மூத்த குடிமக்கள் (85+) மற்றும் வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிப்பதற்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தைலாபுரம் இல்லத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் (87). சட்டமன்ற தேர்தலுக்கான தனது வாக்கை தபால் மூலம் செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராமதாஸ், “என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் என சத்தியம் செய்திருந்தேன். குடும்ப நெருக்கடி காரணமாக அதை மீறி அன்புமணியை அரசியலுக்கு […]
suப்ரீம் கோர்ட்டில், அஜய் கோயல் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும். வேண்டுமென்றே வாக்களிக்காமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். அவர்கள் அரசு திட்டங்களை பெற தடை விதித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய் மால்யா பக்சி, விபுல் எம்.பாஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு எடுத்துக்கொள்ளப்பட்டது.மனுவை விசாரணைக்கு […]
கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜுவை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வாக்கு சேகரித்தார். கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூவை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் […]
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்,’மக்களின் தேர்தல் அறிக்கை 2026′ என்ற பெயரில் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.முதல் பிரதியை விவசாயி நாராயணன் பெற்றுக்கொண்டார், தொடர்ந்து பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் தவெக தேர்தல் அறிக்கையை பெற்றுக்கொண்டனர். அந்த தேர்தல் அறிக்கையில் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500; வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு :- *குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500; 6 […]
கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலை பகுதியில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி கே. பழனிசாமி இன்று வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடையே அவர் பேசுகையில் கூறியதாவது,:- தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்திற்குப் பாதிப்பு ஏற்படாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எந்த மாநிலமும் பாதிக்கப்படாத வகையிலும், மக்கள் மகிழ்ச்சியடையும் வகையிலுமே தொகுதி மறுவரையறை அமையும் […]
சேலத்தில் நடைபெற்ற திமுக பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: அரசியல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் தி.மு.க. கூட்டணியில் ஒருவனாக இல்லாமல் குடும்பத்தில் ஒருவனாக இருக்கிறேன்.தொகுதி மறுவரையறையும், இட ஒதுக்கீட்டையும் ஒன்றாக இணைக்க வேண்டாம். நாளை நமக்கு நடக்க போகும் அநீதிக்கு எதிராக எழுச்சி குரலாக இருக்க வேண்டும். 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை நாங்கள் முன்பே சொல்லிக்கொண்டு வருகிறோம். ஆனால் தற்போது புதிய கண்டுபிடிப்பு போல ஒன்றிய அரசு சொல்லிக்கொண்டிருக்கிறது. தற்போது […]
நாடாளுமன்ற மக்களவையில் தற்போது 543 எம்.பி.க்கள் உள்ளனர். நாடாளுமன்றம், சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்துவது, தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று (ஏப்ரல் 16-ம் தேதி) தொடங்கி ஏப்.18-ம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக நடந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தொகுதி மறுவரையறை செய்வது (மக்களவை தொகுதி களை அதிகரிப்பது) […]
நியூரோடைவர்ஸ் ஃபிசியோ, தமிழ்நாடு பிசியோதெரபி டாக்டர்ஸ் அசோசியேஷன், மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ரீஹாப் சென்டர் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கோவில்பட்டியில் பார்கின்சன் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இந்த நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடையே பார்கின்சன் நோயின் ஆரம்ப அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் பிசியோதெரபியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது., ஸ்ரீ வெங்கடேஷ்வரா பல்கலைக்கழக மாணவர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியை டாக்டர் வினோதினி துவக்கி […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனிப் பெருந்திருவிழா கடந்த, 5-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை வேளையில் சுவாமி -அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 13-ந்தேதி தேரோட்டம், 14-ந்தேதி தீர்த்தவாரி முடிந்து இன்று 15 -ந்தேதி தெப்ப திருவிழா நடைபெற்றது. காலை 10 மணியளவில் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை […]
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாகர்கோவிலில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் பிரம்மாண்ட வாகன பேரணி நடைபெற்றது. தேர்தல் பிரச்சாரத்திற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி சாலை வரை சுமார் […]







