கோவில்பட்டியில் “பார்கின்சன்” நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Oplus_16908288
நியூரோடைவர்ஸ் ஃபிசியோ, தமிழ்நாடு பிசியோதெரபி டாக்டர்ஸ் அசோசியேஷன், மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ரீஹாப் சென்டர் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கோவில்பட்டியில் பார்கின்சன் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடையே பார்கின்சன் நோயின் ஆரம்ப அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் பிசியோதெரபியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது., ஸ்ரீ வெங்கடேஷ்வரா பல்கலைக்கழக மாணவர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியை டாக்டர் வினோதினி துவக்கி வைத்தார் டாக்டர்கள் லீலா, ஜெனிஃபர், முத்துகிருஷ்ணன் மற்றும் நியூரோடைவர்ஸ் பிசியோ மற்றும் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ரீஹாப் சென்டரின் மேனேஜர் சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பார்கின்சன் நோய் குறித்த விழிப்புணர்வு உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சி மூலம் பார்கின்சன் நோயாளிகளுக்கு ஆரம்பத்திலேயே சரியான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என வலியுறுத்தப்பட்டது.

இறுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, பார்கின்சன் நோய் குறித்து கேள்வி–பதில் அமர்வும் நடைபெற்றது.







