• October 22, 2026

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை தடுக்கவே தொகுதி மறுவரையறையை ஸ்டாலின் எதிர்க்கிறார்; எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

 மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை தடுக்கவே தொகுதி மறுவரையறையை ஸ்டாலின் எதிர்க்கிறார்; எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலை பகுதியில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி கே. பழனிசாமி இன்று வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்களிடையே அவர் பேசுகையில் கூறியதாவது,:-

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்திற்குப் பாதிப்பு ஏற்படாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எந்த மாநிலமும் பாதிக்கப்படாத வகையிலும், மக்கள் மகிழ்ச்சியடையும் வகையிலுமே தொகுதி மறுவரையறை அமையும் என உறுதியளித்துள்ளார்.

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதைத் தடுக்கவே முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறையை எதிர்க்கிறார். இதன் மூலம் மத்திய அரசுக்கு பெண்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துவிடும் என அவர் அஞ்சுகிறார். 

இந்த விவகாரத்தில் ஸ்டாலின் ‘டபுள் கேம்’ ஆடுகிறார். பல ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் தமிழகத்திற்கு என்ன கொண்டு வந்துள்ளார்? எங்களைப் பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?” 

 “கோவை மக்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள். இங்கு எங்குமே கருப்புக்கொடி போராட்டம் இல்லை. தோல்வி பயம் காரணமாகவே ஸ்டாலின் இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுக்கிறார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போட்ட அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *