கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளருக்கு டிடிவி தினகரன் வாக்கு சேகரிப்பு
கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜுவை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வாக்கு சேகரித்தார்.

கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூவை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டிடிவி தினகரன் போட்டியிட்டார்

அப்போது அதிமுக கடம்பூர் ராஜுவை எதிர்த்து பிரசாரம் செய்த தினகரன் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருப்பதால் அவரை ஆதரித்து பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.







