• October 21, 2026

Month: February 2026

கோவில்பட்டி

அரசு ஆஸ்பத்திரியில்  நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில்  கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காசநோய்  பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குஇன்று (19/2/26) ஊட்டச்சத்து ,(முட்டை,, பயறு வகைகள் சத்துமாவு)  பொருட்கள் வழங்கப்பட்டது . இது போல் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது.. இந்த நிகழ்ச்சியில்  ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமையில் டாக்டர் சீனிவாசன் முன்னிலையில் ரோட்டரி சங்க உறுப்பினர் வேல் முருகன் மற்றும் முருகேசன் ஆகியோர் 30 -க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார் மாரியப்பன், […]

செய்திகள்

திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? பிரேமலதா பேட்டி

சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணியை தேமுதிக உறுதி செய்துள்ளthu. சென்னை அண்ணா அறிவாலயத்தில்  தேமுதிக  பொதுச் செயலாளர் பிரேமலதா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துவிட்டு வெளியே வந்த போது நிருபர்களிடம் கூறியதாவது:- தேமுதிக யாருடன் கூட்டணி என்று தொடர்ந்து கேட்டீர்கள். அதற்கான விடை இன்று அறிவித்துவிடுகிறோம். திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பத்தின் பேரில் இந்த கூட்டணி அமைத்துள்ளோம். விஜயகாந்த் இருந்தபோதே 2016-ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி அமைய வேண்டியது. எங்களுக்கு எத்தனை தொகுதிகள், யார் வேட்பாளர்கள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கோவிலில் 25 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் 25 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தியான தம்பதிகளை சிறப்பிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கோவில்களில் 70 வயது பூர்த்தி அடைந்த தம்பதிகளை சிறப்பு செய்து வருகின்றனர்.  அதன்படி கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை  பூவனநாதசுவாமி கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று 70 வயது […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட  சோதனை சாவடிகளில் போலீஸ் கண்காணிப்பு 

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன்  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மற்ற மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன […]

கோவில்பட்டி

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது ;கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி

இயேசு கிறிஸ்து சிலு​வை​யில் அறைந்து கொல்​லப்​பட்டு 3-ம் நாள் உயிர்த்​தெழுந்​த​தாக கிறிஸ்​தவர்​களின் புனித நூலான பைபிளில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. ஏசு உயிர்த்​தெழுந்த தினத்தை உலகெங்​கும் வாழும் கிறிஸ்​தவர்​கள் ஈஸ்​டர் பண்​டிகை​யாக கொண்​டாடு​கிறார்​கள். ஈஸ்​டர் பெரு​விழாவுக்கு முந்​தைய 40 நாட்​கள் தவக்​கால​மாக​வும், அதன் முதல் நாள் சாம்​பல் புதன்​கிழமை​யாக​வும் அனுசரிக்​கப்​படும். இந்த 40 நாள் தவக்​காலத்​தில் கிறிஸ்​தவர்​கள் மீன், இறைச்​சி, முட்டை முதலான அசைவ உணவு​களை தவிர்த்து விடு​வார்​கள்.  அத்​துடன், வீடு​களில், திரு​மணம், புது​மனை புகு​விழா என எந்த வித​மான […]

கோவில்பட்டி

கல்லூரி மாணவ மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி(சுயநிதிப் பாடப்பிரிவுகள்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் பல்கலைக் கழக மானியத் தேர்வை (UGC NET) “நம்பிக்கையுடன் வெல்வோம் தந்திரங்கள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள் அணுகுமுறை” என்ற தலைப்பில் மூன்று நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்க நாளில் கல்லூரி செயலர் ப.மகேந்திரன் ஒத்துழைப்போடு கல்லூரி முதல்வர் மூ.சுப்புலட்சுமி  தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.   சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர்  பா.மகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கி, மாணவர்கள் […]

செய்திகள்

புதிய  சட்டத்தின் கீழ், கடன் வசூல் செய்யும் ஏஜென்சியின் மானேஜர் கைது

விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை துன்புறுத்தி பணம் வசூலிப்போரிடம் இருந்து பாதுகாக்க, தமிழ்நாடு பணக் கடன் வழங்கும் நிறுவனங்கள் (கட்டாய நடவடிக்கைகளைத் தடுக்கும்) சட்டம், 2025, கடந்த ஆண்டு ஜூன் 9-ந்தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் பிரிவு 20-ன்படி, எந்தவொரு கடன் வாங்குபவரும் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கடன் வழங்கும் நிறுவனம் அல்லது அதன் முகவர்களால் கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தப்படக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய பணக் கடன் சட்டத்தின் கீழ் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கிராம உதவியாளர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் 2-வது நாளாக கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்களுக்கு 4-ம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் (டி-கிரேடு) வழங்க வேண்டுமென வலியுறுத்தி கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்க மாநில செயலாளர்கள் மாரியப்பன், தங்கப்பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் 22 -ந்தேதி இலவச கண் பரிசோதனை முகாம்

கோவில்பட்டி   1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம்,  அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி  மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான 22 ம் தேதி கோவில்பட்டி   ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது,. காலை   10 மணி முதல்   […]

செய்திகள்

கோவில்பட்டி ரோட்டரி சங்க கூட்டம்

கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின மாதாந்திர கூட்டம் ரோட்டரி சங்கம் ஹாலில் நடந்தது. சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் தலைவர் கருத்தபாண்டியன் சிறப்புரை அஆற்றினார்,. அவருக்கு ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் சிறப்பு விருது வழங்கினார். ரோட்டரி செயலாளர் பழனிகுமார் நன்றிகூறினார். கூட்டத்தில்  ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்