• March 11, 2026

கல்லூரி மாணவ மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

 கல்லூரி மாணவ மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

Oplus_16908288

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி(சுயநிதிப் பாடப்பிரிவுகள்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் பல்கலைக் கழக மானியத் தேர்வை (UGC NET) “நம்பிக்கையுடன் வெல்வோம் தந்திரங்கள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள் அணுகுமுறை” என்ற தலைப்பில் மூன்று நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்க நாளில் கல்லூரி செயலர் ப.மகேந்திரன் ஒத்துழைப்போடு கல்லூரி முதல்வர் மூ.சுப்புலட்சுமி  தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

  சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர்  பா.மகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கி, மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அதிக அளவில் பற்கேற்று வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி உள் தர மதிப்பீட்டுக் கழக ஒருங்கிணைப்பாளரும் ஆங்கிலத்துறைத் தலைவருமான .ரா.சரவண செல்வக்குமார்  சிறப்பு விருந்தினரை வரவேற்று பேசினார்.   கணினி அறிவியல் உதவி பேராசிரியர் மற்றும் இணை தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர் சுகந்தி, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

சிறப்பு விருந்தினராக மதுரை திருமலை நாயக்கர் கல்லூரி, முதுகலை வணிகவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை முழு நேர ஆராய்ச்சியாளர் பெ. அக்சயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூன்று நாட்களும் பயிற்சி அளித்தார். 

முதல் மற்றும் இரண்டாம் நாட்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி திறன் முதல் தாள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. மேலும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் பகுப்பாய்வு செய்து சரியான அணுகுமுறைகள் மற்றும் நேர மேலாண்மை நுட்பங்கள் விளக்கப்பட்டன.

மூன்றாம் நாளில் வணிகம் தொடர்பான கணக்கியல், மேலாண்மை பொருளாதாரம், நிதி மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற பாடப்பகுதிகள் குறித்து தேர்வுக்கு உகந்த தந்திரங்கள் மற்றும் மதிப்பெண் பெறும் முறைகள் விளக்கப்பட்டன.

மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள், பேராசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெற்றனர். 

பயிற்சி நிறைவில்  உதவிப்பேராசிரியர் வணிகவியல் துறை மற்றும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் மா..வைரவன் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *