• October 21, 2026

Month: February 2026

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதன் தலைமையில்  உலக தாய்மொழி நாள் உறுதிமொழி

தமிழ்நாடு அரசு ஆணையின்படி பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு இன்று (20.02.2026) தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன்  தலைமையில் உலக தாய் மொழி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையை கொண்டுவர பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் […]

செய்திகள்

எட்டயபுரம் பாரதியார்  இல்லம் மறுசீரமைப்பு பணிகள்: கனிமொழி எம். பி. ஆய்வு 

தூத்துக்குடி மாவட்டம்  – எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தில் முதல் தளம் மழையால் பாதிக்கப்பட்டுச் சேதமடைந்தது.  இதையடுத்து பொதுப்பணித்துறையின் பாரம்பரிய கட்டிடங்கள் பிரிவு பொறியாளர்களால் எட்டயபுரம்  பாரதியார் இல்லம் ஆய்வு செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையின்படி, ரூ.1.53கோடி மதிப்பீட்டில்  பாரதியார் இல்லம் பழைமை மாறாமல் மறுசீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.  மறுசீரமைப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர்  கனிமொழி எம். பி.இன்று வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு […]

செய்திகள்

தவெக சார்பில் அஞ்சலை அம்மாள்  65வது நினைவு தினம்

சுதந்திர போராட்ட வீராங்கனையும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களின் ஒருவருமான  தென்னிந்திய ஜான்சிராணி அஞ்சலை அம்மாளின் 65வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது, கோவில்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் லயன் செல்வின் சுந்தர் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது . இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைசெயலாளர் சத்யா, செயற்குழு உறுப்பினர்கள் சித்ரா, உஷாராணி, கௌதமி, ஜான்சிராணி, கூடலிங்கம், வினோத்கண்ணன், மகேஷ்குமார், […]

கோவில்பட்டி

துரை வைகோ எம்.பி.யிடம் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கோரிக்கை மனு

கோவில்பட்டியில் துரை வைகோ எம்.பியை , நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம் தலைமையில், நிர்வாகிகள்  சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில்,” பிளாஸ்டிக் லைட்டர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்ட போதிலும், உதிரிப் பாகங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து இங்கு தயாரித்து விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது, இது பற்றி துரை வைகோ கூறுகையில்.” தீப்பெட்டி தொழிலின் பிரச்சினை […]

கோவில்பட்டி

செயின்ட் ஆண்ட்ரூஸ் பள்ளி விளை யாட்டு விழா

கோவில்பட்டி செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 27வது விளையாட்டு விழா மற்றும்  ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர். ஆலிஸ் பிளெஸ்சி தலைமை தாங்கினார். விளையாட்டு விழாவில் மாணவர்கள் பல்வேறு தடகள  மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் விஜயன் நல்லாசிரியர் விருது பெற்றவர் மற்றும் பிஎஸ்என் கல்வி குழுமத்தின் கல்வி ஆலோசகர் டாக்டர். நடராஜன்,,ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜ்ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு […]

கோவில்பட்டி

“போட்டித் தேர்வுக்கான திறன் அறிதல் எதிர்கொள்ளும் சவால்கள்”  பயிற்சிப் பட்டறை

கோவில்பட்டி, கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி கணிதவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பாக  “போட்டித் தேர்வுகளுக்கான திறன் அறிதலில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள்” எனும் தலைப்பில் பயிற்சிப் பட்டறை 2 நாட்கள் நடைபெற்றது.  இப்பயிற்சிப் பட்டறையின் சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர், ஆதித்தனார் கல்லூரியின் கணிதத்துறையில் ஓய்வு பெற்ற இணைப்பேராசிரியர்  செ.சேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இப்பயிலரங்கினை கல்லூரியின் முதல்வர் பா. உமாதேவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கணிதத்துறையின் இணைப்பேராசிரியர் […]

கோவில்பட்டி

சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோவில் சித்தர் ராமமூர்த்தி சுவாமிகள் முக்தி அடைந்தார்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில் . சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்தர் ராமமூர்த்தி சுவாமிகளால் உருவாக்கப்பட்டது. இக்கோவிலில் வெக்காளியம்மன் சிலை உடன் மகாவிஷ்ணு வெங்கடாஜலபதி சிலைகளும் பெரிய அளவில் கண்ணை கவரும் விதத்தில் உள்ளன..    வெக்காளியம்மன் கோவில் சிலை 42 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் உள்ள நீரூற்று  வற்றாத நீரூற்றாக உள்ளது.  சித்தர் ராமமூர்த்தி சுவாமிகள் சிந்தலக்கரை கிராமத்தில் வேலப்ப நாயக்கர் சிலுக்கு அம்மாள் ஆகியோருக்கு  […]

செய்திகள்

கோடைகாலத்தில் மகளிருக்கு ஆண்டுதோறும் ரூ.2,000 வழங்கப்படும் – அமைச்சர் கீதா ஜீவன்

மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ரூ.1,000யை திமுக அரசு வழங்கி வருகிறது. தேர்தலை முன்னிட்டு அடுத்து 3 மாதத்துக்கு சேர்த்து 3 ஆயிரம் ரூபாய், கோடைக்கால சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் என 5 ஆயிரம் ரூபாய், உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அவர் கூறியதாவது:- 2026 தேர்தல் உஷ்ணம் அதிகரித்துவிட்டதால் கோடைக்காலத்திற்கு ரூ.2 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளீர்கள். இரவோடு இரவாக தொகை […]

செய்திகள்

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு? மத்திய அரசு பரிசீலனை

சமூகவலைதளங்களின் வளர்ச்சி இன்று பெரிய அளவில் சென்று கொண் டிருக்கிறது.பெரும்பாலானோர் இதிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேறு தற்போது அனைத்தையும் ஆட்கொண்டுள்ளது. இதில் நன்மை தரும் விஷயங்கள் பல இருந்தாலும், ஆபத்தான அம்சங்களும் அதிகம் உள்ளன. தீங்கு விளைவிக்கும் இந்த விஷயங்களில் சிறார்கள் சிலநேரங்களில் சிக்கி விடுகிறார்கள். இது கவலை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. உலகம் முழுவதும் இதுதான் நிலை. இதுபற்றி ஆராய்ந்த ஆஸ்திரேலியா நாடு, தங்களது நாட்டில் 16 வயதுக்கு உட்பட்ட […]

செய்திகள்

தி கேரளா ஸ்டோரி 2′ படத்தை தடை செய்ய வேண்டும்; பினராயி விஜயன்

இயக்குனர் சுதீப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி 2 தேசிய விருதுகளை வென்ற படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்த படத்தில் அதா சர்மா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக இயக்குனர் சுதீப்தோ சென் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வென்றார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது, ‘தி கேரளா ஸ்டோரி 2 ‘ என்ற தலைப்பில் அதன்இரண்டாம் – பாகம் உருவாகி இருக்கிறது. இதனை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். […]