செயின்ட் ஆண்ட்ரூஸ் பள்ளி விளை யாட்டு விழா
கோவில்பட்டி செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 27வது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர். ஆலிஸ் பிளெஸ்சி தலைமை தாங்கினார்.

விளையாட்டு விழாவில் மாணவர்கள் பல்வேறு தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் விஜயன் நல்லாசிரியர் விருது பெற்றவர் மற்றும் பிஎஸ்என் கல்வி குழுமத்தின் கல்வி ஆலோசகர் டாக்டர். நடராஜன்,,ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜ்ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி உரையாற்றினார்.
மேலும், மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளையும் பள்ளி முதல்வர் சாந்தி உடற்கல்வி ஆசிரியர் காளிராஜ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.







