“போட்டித் தேர்வுக்கான திறன் அறிதல் எதிர்கொள்ளும் சவால்கள்” பயிற்சிப் பட்டறை
Oplus_16908288
கோவில்பட்டி, கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி கணிதவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பாக “போட்டித் தேர்வுகளுக்கான திறன் அறிதலில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள்” எனும் தலைப்பில் பயிற்சிப் பட்டறை 2 நாட்கள் நடைபெற்றது.
இப்பயிற்சிப் பட்டறையின் சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர், ஆதித்தனார் கல்லூரியின் கணிதத்துறையில் ஓய்வு பெற்ற இணைப்பேராசிரியர் செ.சேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

இப்பயிலரங்கினை கல்லூரியின் முதல்வர் பா. உமாதேவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கணிதத்துறையின் இணைப்பேராசிரியர் .எ. சுசிலா அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். இப்பயிற்சிப் பட்டறையில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 200 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இறுதியில் கணிதத்துறையின் உதவிப் பேராசிரியர் நா.சண்முகப்பிரியா நன்றி கூறினார்.







