துரை வைகோ எம்.பி.யிடம் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கோரிக்கை மனு
கோவில்பட்டியில் துரை வைகோ எம்.பியை , நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம் தலைமையில், நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில்,” பிளாஸ்டிக் லைட்டர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்ட போதிலும், உதிரிப் பாகங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து இங்கு தயாரித்து விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது,

இது பற்றி துரை வைகோ கூறுகையில்.” தீப்பெட்டி தொழிலின் பிரச்சினை குறித்து ஏற்கெனவே தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுத்துள்ளேன். பிளாஸ்டிக் லைட்டர்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தேன். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். முதல்வர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.” என்று குறிப்பிட்டார்.







