தவெக சார்பில் அஞ்சலை அம்மாள் 65வது நினைவு தினம்
சுதந்திர போராட்ட வீராங்கனையும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களின் ஒருவருமான தென்னிந்திய ஜான்சிராணி அஞ்சலை அம்மாளின் 65வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது,
கோவில்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் லயன் செல்வின் சுந்தர் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைசெயலாளர் சத்யா, செயற்குழு உறுப்பினர்கள் சித்ரா, உஷாராணி, கௌதமி, ஜான்சிராணி, கூடலிங்கம், வினோத்கண்ணன், மகேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுமங்கலி ராஜா, ராமமூர்த்தி, மாவட்ட இளம் பெண்கள் பாசறை அமைப்பாளர் அன்னலட்சுமி சுந்தர், மாவட்;ட உறுப்பினர் சேர்;க்கை அணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட கொள்கை பரப்புரை அணி அமைப்பாளர் ராஜா, நகர செயலாளர் (பொறுப்பு) கிருஷ்ணவேணி, மத்திய ஒன்றிய செயலாளர் பிரசாத், வடக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், ஒன்றிய இளம் பெண்கள் பாசறை அமைப்பாளர் முத்துமாரி, ஒன்றிய நிர்வாகிகள் செல்வம், சத்தியராஜ், நகர செயற்குழு உறுப்பினர் லட்சுமி, முத்துக்குமார் உள்பட கலந்து கொண்டனர்.







