எட்டயபுரம் பாரதியார் இல்லம் மறுசீரமைப்பு பணிகள்: கனிமொழி எம். பி. ஆய்வு


தூத்துக்குடி மாவட்டம் – எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தில் முதல் தளம் மழையால் பாதிக்கப்பட்டுச் சேதமடைந்தது.
இதையடுத்து பொதுப்பணித்துறையின் பாரம்பரிய கட்டிடங்கள் பிரிவு பொறியாளர்களால் எட்டயபுரம் பாரதியார் இல்லம் ஆய்வு செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையின்படி, ரூ.1.53கோடி மதிப்பீட்டில் பாரதியார் இல்லம் பழைமை மாறாமல் மறுசீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மறுசீரமைப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம். பி.இன்று வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடன் சென்று இருந்தனர்.







