• October 21, 2026

Month: February 2026

செய்திகள்

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் : மு.க.ஸ்டாலின் கண்டனம்

நாடாளுமன்ற  மக்களவையில் நேற்று முன்தினம் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று பேசுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை அழைத்தபோது, அவர் முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனேயின் நினைவுக்குறிப்புகளில் இருந்து, சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட முயன்றார். ஆனால் நரவனேயின் அந்த புத்தகம் வெளியிடப்படாத புத்தகம் எனக்கூறி பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் அதனை மேற்கோள் காட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்றும் அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எம்.எம்.நரவனே விவகாரத்தை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே விமான பயிற்சி நிலையம் அமைக்க கூடுதல் நிலம் கையகப்படுத்தும் பணி;

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- 1997-ம் வருடத்திய தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டம் பிரிவு 3 துணைப்பிரிவு 2-ன் கீழான பொது அறிவிக்கை கீழ்க்காணும் விபர அட்டவணையில் குறிப்பிட்டுள்ளதும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் தோணுகால் மற்றும் நாலாட்டின்புத்தூர் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள நிலங்கள் தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டம் 1997ன் பிரிவு 3(2)ன் கீழான அறிவிப்பிற்கு இணங்க தொழிலியல் நோக்கத்திற்காக, அதாவது விமான பயிற்சி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி யில் தவெக ஆண்டு விழா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 3வது ஆண்டு தொடக்க விழா  நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தவெக மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்,தூத்துக்குடி வடக்கு மாவட்டசெயலாளர் பாலசுப்பிரமணியன்  தலைமை தாங்கினார்.  அவர் குழந்தைகள்,முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் விசில் வழங்கி,வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு ஓட்டு கேட்டார்.மாவட்ட நகர ஒன்றிய மற்றும் இளைஞரணி,மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

கோவில்பட்டி

கல்லூரி மாணவர்களின் `எதிர்காலம்’ ஓட்டத்துக்கான பயிற்சி முகாம்

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் வைர விழா கொண்டாட்டமாக தினமும் ஒவ்வொரு துறை சார்பில் ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன,அந்த வகையில் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை மற்றும் நிறுவனப் புதுகைக் கழகம் மற்றும் கோவில்பட்டி, ஜெ.சி.ஐ ஆகியவை இணைந்து “எதிர்காலம் ஓட்டத்துக்கான பயிற்சி முகாம்(FUTURE TRAINING MARATHON) என்ற தலைப்பில் இன்று 3.2.2026 ஒருநாள் பயிற்சி வகுப்பு நடத்தின.தொடக்க விழாவிற்கு கல்லூரி இயக்குநர் முனைவர். பா.மகேஷ்குமார் தலைமை தாங்கினார். கோவில்பட்டி […]

செய்திகள்

தூய்மைப் பணியாளரின் நேர்மையை பாராட்டி தங்கச் சங்கிலி பரிசளித்தார் ரஜினிகாந்த்

சென்னை மாநகராட்சியில், தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருபவர் பத்மா (50). இவர் கடந்த ஜனவரி 11ம் தேதி தனது வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தி.நகர் வண்டிக்காரன் சாலையில் கிடந்த ஒரு பையை எடுத்துப் பார்த்தபோது, அதில் ஐஸ்கிரீம் டப்பாவிற்குள் ரூ.45 லட்சம் மதிப்பிலான 45 சவரன் தங்க நகைகள் இருந்தன. வறுமையில் வாடினாலும், நேர்மை தவறாத பத்மா, உடனடியாக தங்க நகைகள் இருந்த அந்த பிளாஸ்டிக் கவரை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சோதனை […]

தூத்துக்குடி

வாலிபர் எரித்துக்கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி   தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஜெபராஜ் (வயது 62) என்பவர் கடந்த 2017ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மரிய சுரேஷ் (37) என்பவரை முன்விரோதம் காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார்.  இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் – II […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கல்லூரியில் “மின்னணு சந்தைபடுத்துதல்” பயிற்சி முகாம்  

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி கல்லூரியின் வைர விழா (60ஆண்டு) கொண்டாட்டமாக, சுயநிதிப்பாடப்பிரிவுகளின் வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை மற்றும் நிறுவனப் புதுகைக் கழகம் மற்றும் கோவில்பட்டி, ஏ.ஜி.ஜே கணினி பயிற்சி மையம் ஆகியவை இணைந்து “மின்னணு சந்தைபடுத்துதல்” என்ற தலைப்பில். ஒருநாள் பயிற்சி முகாம்  நடைபெற்றது. கல்லூரி இயக்குநர் பா.மகேஸ்குமார் தலைமையுரையாற்றி தொடக்கி வைத்தார். துறைத்தலைவர்.. செ.பழனிக்குமார் சிறப்புரையாற்றினார். இளங்கலை வணிகவியல் மாணவி. எம்.குருசரஸ்வதி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.. சிறப்பு விருந்தினராக, மத்திய அரசால் அங்கீகரிக்கபட்ட கோவில்பட்டியிலுள்ள ஏ.ஜி.ஜே […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட  போலீசாருக்கு 6 நாட்கள் சிறப்பு புத்தாக்க பயிற்சி வகுப்பு தொடக்கம்

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர்  உத்தரவின்படி இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள போலீசாருக்கு  6 நாட்கள் சிறப்பு புத்தாக்க பயிற்சி வகுப்பு இன்று தொடங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட  காவல் அலுவலகத்தில்  நடைபெற்ற புத்தாக்க பயிற்சி வகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நை.சிலம்பரசன்  துவக்கி வைத்தார். இப்பயிற்சியில் காவல்துறையினரின் திறனை மேம்படுத்தும் வகையில் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள், காவல்துறையினர் பொதுமக்களுக்கு இடையயேயான அனுகு முறை, […]

செய்திகள்

திருப்பரங்குன்றம் வழக்கு: மதுரை ஐகோர்ட்டில் மதுரை கலெக்டர் மன்னிப்பு கோரி னார்

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடத்தை விட்டு, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த டிசம்பர் 1-ந்தேதி உத்தரவிட்டார். ஆனால், டிசம்பர் 3-ந்தேதி கார்த்திகை தீபத்திருந்தாள் தினத்தன்று, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் […]

செய்திகள்

திருச்சி மாநாட்டில், 21ம் தேதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி நாம் தமிழர் கட்சியை தொடங்கிய இயக்குனரும் நடிகருமான சீமான் ,2016-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறார். நாம் தமிழர்  கட்சி, அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது. 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளை பெற்ற இக்கட்சி, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளை பெற்றது. தொடர்ந்து நடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 6.58 ஆக உயர்ந்த அக்கட்சியின் […]