வாலிபர் எரித்துக்கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஜெபராஜ் (வயது 62) என்பவர் கடந்த 2017ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மரிய சுரேஷ் (37) என்பவரை முன்விரோதம் காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார்.
இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் – II ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா நேற்று (02.02.2026) மேற்படி எதிரி ஜெபராஜ் என்பரை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன் மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலைய காவல்துறையினரையும், அப்போதைய தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் தவனிதா ராணி மற்றும் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் பாராட்டினார்.







