கோவில்பட்டி கல்லூரியில் “மின்னணு சந்தைபடுத்துதல்” பயிற்சி முகாம்
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி கல்லூரியின் வைர விழா (60ஆண்டு) கொண்டாட்டமாக, சுயநிதிப்பாடப்பிரிவுகளின் வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை மற்றும் நிறுவனப் புதுகைக் கழகம் மற்றும் கோவில்பட்டி, ஏ.ஜி.ஜே கணினி பயிற்சி மையம் ஆகியவை இணைந்து “மின்னணு சந்தைபடுத்துதல்” என்ற தலைப்பில். ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
கல்லூரி இயக்குநர் பா.மகேஸ்குமார் தலைமையுரையாற்றி தொடக்கி வைத்தார். துறைத்தலைவர்.. செ.பழனிக்குமார் சிறப்புரையாற்றினார்.

இளங்கலை வணிகவியல் மாணவி. எம்.குருசரஸ்வதி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.. சிறப்பு விருந்தினராக, மத்திய அரசால் அங்கீகரிக்கபட்ட கோவில்பட்டியிலுள்ள ஏ.ஜி.ஜே கணினி பயிற்சி மைய தலைமை நிர்வாக அதிகாரி,. ஜெ.செல்வக்குமார் கலந்து கொண்டு இறுதியாண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளுக்கு மின்னணு சந்தைபடுத்துதல் பற்றி பயிற்சியளித்தார்.
பயிற்சி முகாம் தொடக்கத்தில் இளங்கலை வணிகவியல் மாணவி. எம். தீபாஸ்ரீ வரவேற்று பேசினார். முடிவில் முதுகலை வணிகவியல் இறுதியாண்டு மாணவி. பி. அபிலட்சுமி நன்றி kooறினார்.







