கல்லூரி மாணவர்களின் `எதிர்காலம்’ ஓட்டத்துக்கான பயிற்சி முகாம்
Oplus_16908288


கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் வைர விழா கொண்டாட்டமாக தினமும் ஒவ்வொரு துறை சார்பில் ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன,
அந்த வகையில் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை மற்றும் நிறுவனப் புதுகைக் கழகம் மற்றும் கோவில்பட்டி, ஜெ.சி.ஐ ஆகியவை இணைந்து “எதிர்காலம் ஓட்டத்துக்கான பயிற்சி முகாம்(FUTURE TRAINING MARATHON) என்ற தலைப்பில் இன்று 3.2.2026 ஒருநாள் பயிற்சி வகுப்பு நடத்தின.
தொடக்க விழாவிற்கு கல்லூரி இயக்குநர் முனைவர். பா.மகேஷ்குமார் தலைமை தாங்கினார். கோவில்பட்டி ஜெ.சி.ஐ தலைவர் .என்.ரகுபதி வரவேற்று பேசினார்.. துறைத்தலைவர் செ.பழனிக்குமார் சிறப்புரையாற்றினார்.
ஜெ.சி.ஐ பயிற்சியாளர்கள் சுபஸ்ரீ(கோவில்பட்டி) நர்மதா சுதன்(சிவகாசி ), ,ஆர்.டி. ராஜகுமாரன்,( தூத்துக்குடி), ,. மோகன்ராம் முரளி (விருதுநகர் ஆகியோர் மாணவ/மாணவிகளுக்கு அணி கட்டமைப்பு மற்றும் நேர்காணல் தொடர்பாக பயிற்சிஅளித்தனர்.

நேர்காணலில் பங்கேற்கும் மாணவர்கள் எப்படி செல்ல வேண்டும்.எந்த வகையில் தயாராக இருக்க வேண்டும்.கேட்கும் கேள்விகளுக்கு எந்தவகையில் பதில் அளிக்க வேண்டும். எவ்வாறு உடை அணிந்து செல்ல வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகள் கூறினார்கள். மேலும் ஒர அணியை கட்டமைத்து எவ்வாறு பணியாற்ற வேண்டும் ? எதிர்கால வாழ்க்கை சிறக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட மாணவ/மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. முகாம் முடிவில் ஜெ.சி.ஐ செயலாளர் எம்.செல்வலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியை சுவாதிகா தொகுத்து வழங்கினார். முகாமில் பங்கேற்ற பயிற்சியாளர்கள் மற்றும் ஜெசிஐ நிர்வாகிகளுக்கு கல்லூரி இயக்குனர் பா.மகேஷ்குமார் நினைவு பரிசு வழங்கினார்.
நுண்ணிய அளவு சோதனைகள் பயிலரங்கம்

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் வேதியியல் துறை சார்பாக நுண்ணிய அளவு சோதனைகள் என்னும் தலைப்பில் மாநில அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது.
இந்து கல்லூரி முன்னாள் பேராசிரியர் மற்றும் வேதியியல் துறை தலைவர் எஸ்..முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நுண்ணிய அளவு வேதியியல் சோதனைகள் மேற்கொண்டால் ஆய்வக வேதிப்பொருள் பயன்படுத்தப்படும் அளவு குறைவதுடன் செலவுகள் குறையும், சுற்றுசூழல் பாதிப்பும் அதனால் ஏற்படும் உடல் நோய்களும் குறையும் என விளக்கி, நுண்ணிய அளவில் சோதனைகள் மேற்கொள்ளும் முறைகளை செய்து காண்பித்தார்.
இதை தொடர்ந்து மாணவர்கள் செயல் முறை பயிற்சி மேற்கொண்டனர். இணைப்பேராசிரியர் கோமதி சங்கரேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கல்லூரிச் செயலர் .ப.மகேந்திரன் தலைமை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் .மூ. சுப்புலெட்சுமி வாழ்த்துரை வழங்கினார். இணைப்பேராசிரியர் இரா.வெங்கடேசன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்..சிவகவிநேசன் நன்றியுரை வழங்கினார்.
பயிலரங்க ஏற்பாடுகளை வேதியியல் துறைத் தலைவர் பா.உமாதேவி மற்றும் ஜேம்ஸ் பால்கன் ஆனந்த், மா.இராஜகோமதி, ஆய்வக உதவியாளர் பத்மா ,.பெனிட்டா ஆகியோர் செய்திருந்தனர். இப்பயிலரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்களும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். இப்பயிலரங்கின் மூலம் சுமார் 120 மாணவர்கள் பயன்பெற்றனர்.







