கோவில்பட்டி யில் தவெக ஆண்டு விழா
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 3வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தவெக மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்,தூத்துக்குடி வடக்கு மாவட்டசெயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

அவர் குழந்தைகள்,முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் விசில் வழங்கி,வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு ஓட்டு கேட்டார்.மாவட்ட நகர ஒன்றிய மற்றும் இளைஞரணி,மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்







