• October 22, 2026

Month: February 2026

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு சி.மதன் டாக்டருக்கு படித்தவர்

 தூத்துக்குடி மாவட்ட போலீஸ் பிரண்டாக இருக்கும் சிலம்பரசன் சென்னை உதவி போலீஸ் ஐஜி யாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.  அவருக்கு பதிலாக திருநெல்வேலி மாநகர துணை கமிஷனராக இருக்கும் சி.மதன், தூத்துக்குடி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமிக்கப்பட்டிருக்கிறார் ஐபிஎஸ் பயிற்சியில் அகில இந்திய அளவில் விருது பெற்ற சி.மதன், மதுரையைச் சேர்ந்த சிட்டிபாபு -சித்ரா தம்பதியரின் மகன் ஆவார். 31 வயதான சி.மதன்  எம்.பி.பி.எஸ். படித்தத டாக்டர் ஆவார்.2021 ஆம் ஆண்டு ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வில், […]

கோவில்பட்டி

ஓ.பன்னீர்செல்வம் அணியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்

 ஓ பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பூர் திரு.சீனி (எ) ராஜகோபால்  தலைமையில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் .சின்னத்துரை கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சொரிமுத்து புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் விளாத்திகுளம் நகரச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் இன்று திமுகவில் இணைந்தனர் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள்  ஆய்வு குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன்  முன்னிலையில்n தங்களை […]

செய்திகள்

சென்னை தேனாம்பேட்டையில் உருவாகும்  உயர்மட்ட மேம்பாலத்திற்கு  சிவாஜி கணேசன் பெயர் சூட்ட அகமதாபாத்

குஜராத் மாநிலம் அகமதாபாத் தமிழ் சங்கத் தலைவர் எஸ். கவிதாஸ்,தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- நடிகர்திலகம் சிவாஜிகணேசன்  தமிழ்த்திரையுலகின் தூணாக, தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் தன் தனிச்சிறப்புவாய்ந்த நடிப்பின்மூலம் சுதந்திரப் போராட்ட வீரர்கள், தேசத்தலைவர்கள் ஆகியோரை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு சென்ற மாபெரும் கலைஞன். தற்போது சென்னை, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படவிருக்கும் உயர்மட்ட மேம்பாலத்திற்கு, […]

கோவில்பட்டி

பருத்தி விவசாயிகள் மானிய தொகை பெற வேண்டுமா? உடனே இதை செய்யுங்க….

கோவில்பட்டி வேளாண்மை துறையின் ஒரு முக்கிய அறிவிப்பு பருத்தி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப் படுகிறது.  அதற்கு தேவையான ஆவணங்கள் 1.பட்டா  2.அடங்கல் 3. ஆதார்  4. ரேஷன் கார்டு  5. வங்கி கணக்கு நகல்  6. பருத்தியில் விவசாயி நின்று ஒரு போட்டோ ஆகியவற்றின் நகல்கள்   இவற்றை கோவில்பட்டி வேளாண்மை துறைக்கு கொண்டு சென்று கொடுக்க வேண்டும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 8778007459 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி

15 ஆம் தேதி மகா சிவராத்திரி: கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர்  கோவிலில் நான்கு

 மகா சிவராத்திரி என்றால் சிவபெருமானுக்கு உரிய இரவு என்று பொருள்.  சிவனுக்கு உரிய சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவ பக்தர்களின் விரதங்களுள் மிகவும் முக்கியமானது மகா சிவராத்திரி ஆகும்.  இந்த நாளில் சிவாலயங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதுவும் இரவு முழுவதும் சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இப்படிப்பட்ட மகா சிவராத்திரி நாளில் தான் சிவபெருமான் பாற்கடலை கடையும் போது […]

தூத்துக்குடி

தூத்துக்குடி ஆட்சியர் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட முயன்றவர் கைது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக  பொதுமக்களிடம் பணம் மோசடியில் ஈடுபடுவதற்காக மாவட்ட ஆட்சியர்  புகைப்படத்தை Display Picture ஆக வைத்து பல போலியான வாட்ஸ்அப் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும், கணக்குகளை உருவாக்கியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட உதவியாளர் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நை. சிலம்பரசன் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) தீபு […]

கோவில்பட்டி

உதவி செய்யும் மனப்பான்மை: மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு 

கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில் ஆக்டிவ் மைண்ட்ஸ்  மனநல காப்பகத்தில் இன்று கோவில்பட்டி எவரெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி செயலர் அய்யனார் ஆலோசனையின்பேரில் பள்ளி முதல்வர் மகாலட்சுமி தலைமையில் 50 க்கும் மேற்பட்ட 7 மற்றும் 8 ம் வகுப்பு மாணவ மாணவிகள் காப்பகத்திற்கு வந்தனர்.  ஆக்டிவ் மைண்ட்ஸ் தலைவர் தேன் ராஜா அனைவரையும் வரவேற்று பேசினார்.  மாணவ மாணவிகளிடம் பிறருக்கு எந்த எந்த வகையில் எல்லாம் உதவி செய்யலாம் என்று எடுத்து கூறினார்.  மாணவ மாணவிகள் பங்களிப்பில் காப்பகத்தில் […]

செய்திகள்

கோவில்பட்டி கோவிலில் மாசி மாதப்பிறப்பு சிறப்பு பூஜை

கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட   தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள   ஸ்ரீ அலமேலுமங்கா பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் சன்னிதியில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை நடைப்பெற்றது.  சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயரும் அந்த நேரமே விஷ்ணுபதி புண்ணியகாலம் எனப்படுகிறது. இது வைகாசி ஆவணி கார்த்திகை மாசி மாத பிறப்பு அன்று ஆண்டுக்கு 4 முறை வரும். பெருமாளுக்கு உரிய மிக சிறப்பான நாள் இது. ஏகாதசி திதியை விட […]

செய்திகள்

கோவில்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா 

கோவில்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா கிருஷ்ணன்கோவில் அருகில் உள்ள சாரதா மஹாலில் நடைபெற்றது.  குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) திலகா வரவேற்றார். மருத்துவர்கள் சண்முகசுந்தர், உதயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நகர்மன்ற தலைவர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கினார். பின்னர், கர்ப்பிணிகளுக்கு அவர்களது கணவர் மற்றும் உறவினர்கள் மூலம் வளையல்கள் அணிவிக்கப்பட்டது.  […]

செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை: மு க ஸ்டாலின் அறிவிப்பை விமர்சனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- தேர்தல் தோல்வி பயம், முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா?. 28 மாதங்களாக “1000 ரூபாய்” கொடுக்காமல் இழுத்து அடித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து “கோடைக்கால சிறப்புத் தொகை” கொடுக்கிறாராம்.  2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே?.  சிறுமி முதல் மூதாட்டி […]