உதவி செய்யும் மனப்பான்மை: மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு
கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் மனநல காப்பகத்தில் இன்று கோவில்பட்டி எவரெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி செயலர் அய்யனார் ஆலோசனையின்பேரில் பள்ளி முதல்வர் மகாலட்சுமி தலைமையில் 50 க்கும் மேற்பட்ட 7 மற்றும் 8 ம் வகுப்பு மாணவ மாணவிகள் காப்பகத்திற்கு வந்தனர்.

ஆக்டிவ் மைண்ட்ஸ் தலைவர் தேன் ராஜா அனைவரையும் வரவேற்று பேசினார். மாணவ மாணவிகளிடம் பிறருக்கு எந்த எந்த வகையில் எல்லாம் உதவி செய்யலாம் என்று எடுத்து கூறினார்.
மாணவ மாணவிகள் பங்களிப்பில் காப்பகத்தில் தங்கியிருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உடைகள் ,பிஸ்கட் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர் .மாணவ மாணவிகள் தங்கிருப்பவர்களுடன் நலம் விசாரித்து உரையாடினர்.மேலும் அவர்களுடன் பாட்டு பாடியும் நடனமாடியும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி தெரிவித்தனர்
இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியை மனோன்மணி, ஆசிரியர் திருப்பதி, காப்பக ஊழியர்கள் மேற்பார்வையாளர் இசக்கியப்பன், சமுக பணியாளர் ருக்மணி, செவிலியர் சக்திஸ்வரிஆகியோர் கலந்து கொண்டனர் .







