கோவில்பட்டி கோவிலில் மாசி மாதப்பிறப்பு சிறப்பு பூஜை
Oplus_16908288
கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட
தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள ஸ்ரீ அலமேலுமங்கா பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் சன்னிதியில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயரும் அந்த நேரமே விஷ்ணுபதி புண்ணியகாலம் எனப்படுகிறது. இது வைகாசி ஆவணி கார்த்திகை மாசி மாத பிறப்பு அன்று ஆண்டுக்கு 4 முறை வரும். பெருமாளுக்கு உரிய மிக சிறப்பான நாள் இது. ஏகாதசி திதியை விட பல மடங்கு உயர்வானது.

இதனையொட்டி காலை இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடினர். பூஜைகளை சுப்பிரமணிய சாமி செய்தார்.nசுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன். மற்றும் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.







