கோவில்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா

கோவில்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா கிருஷ்ணன்கோவில் அருகில் உள்ள சாரதா மஹாலில் நடைபெற்றது.
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) திலகா வரவேற்றார். மருத்துவர்கள் சண்முகசுந்தர், உதயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நகர்மன்ற தலைவர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கினார். பின்னர், கர்ப்பிணிகளுக்கு அவர்களது கணவர் மற்றும் உறவினர்கள் மூலம் வளையல்கள் அணிவிக்கப்பட்டது. 105 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
விழாவில், நகர திமுக பொறுப்பாளர் (கிழக்கு) சுரேஷ்,மத்திய ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ்பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் சண்முகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 5 வகை விருந்து வழங்கப்பட்டது.







