கோவில்பட்டி ரோட்டரி கிளப் 50 வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. கோவில்பட்டி ரோட்டரி சங்கம் 15/1/1976 அன்று தொடங்கப்பட்டு 50 வது ஆண்டு வரை மக்களுக்கு பல சேவைகளை செய்துவருகிறது. உலகில் போலியோ என்ற கொடிய நோயை விரட்டி சரித்திர சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து மக்கள் சேவை செய்துவரும் கோவில்பட்டி ரோட்டரி கிளப்பின் 50 வது ஆண்டு தொடக்க விழாவில் ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ஜி.ரமேஷ் ரோட்டரி பட்டயத்தை தற்போதைய தலைவர் ராஜ்குமார் மற்றும் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு மாதாந்திர வருமானம்: கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் அறிமுகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு மாதந்திர வருமானம் கிடைக்கும் வகையில், கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் 2.0 அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தீன்தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டமானது 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, அவர்களுக்கு நிரந்தரமான மாதாந்திர வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்று தருவதை குறிக்கோளாக கொண்டு 2012-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஏழுமலை வாசன் (வயது 27), கூலி வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜேந்திரன் மகன் இசக்கி ராஜா (40). இவர்கள் இருவரும் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்கள். 2 பேர் வீட்டுக்கும் ஒரே மின் இணைப்பு என்பதால்2 பேரும் மின் கட்டணத்தை பகிர்ந்து கட்டுவார்களாம். இந்த நிலையில் மின் கட்டணம் கட்டுவதற்காக ஏழுமலை வாசன், இசக்கி ராஜாவிடம் பணம் கேட்டிருக்கிறார். இதனால் […]
கிருஷ்ணகிரி அருகே உள்ள இரத்தினபுரி கிராமத்தில் வசிப்பவர் திருப்பதி இவரது மகன் தனுஷ் (25). இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடன் கிருஷ்ணகிரி தோட்டகிரி கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் மாரியப்பன் (21) என்பவர் கிளீனர் ஆக வேலை செய்து வருகிறார். இருவரும் நேற்று கிருஷ்ணகிரியில் இருந்து பிக்கப் வேனில் ரோஜா மலர்களை ஏற்றிக் கொண்டு நெல்லை வந்தனர். அங்கு ரோஜா பூக்களை இறக்கிவிட்டு தூத்துக்குடிக்கு பூக்களை இறக்குவதற்காக நெல்லையிலிருந்து தூத்துக்குடி சென்று கொண்டிருந்தனர். […]
தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின் போது, ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ என்ற கலைவிழா கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் (14/01/2026) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பறை இசைத்து சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த கலைவிழாவை திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி ஒருங்கிணைத்து வருகிறார். ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா […]
கோவில்பட்டி நகராட்சி 31-வது வார்டு குழுமம் சார்பாக மக்கள் ஒற்றுமை வலியுறுத்தி பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தன. சிபிஎம் நகர செயலாளரும்,31வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான சீனிவாசன் தலைமை தாங்கிவிளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தார். ஓட்டப்பந்தயம்,சாக்கு ஓட்டம், சிலம்பம்,உறியடித்தல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வார்டு பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பாக திராவிட சமத்துவ பொங்கல் விழா தாமஸ் நகர் சமுதாயத் திடலில் ஒன்றிய கழக செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. மாவட்ட மாணவரணி துணைஅமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், வழக்கறிஞர் ராமச்சந்திரன்,ஒன்றிய அவைத்தலைவர் பொன்னுச்சாமி,ஒன்றிய துணைச் செயலாளர் அழகுராஜ்,ஒன்றிய பொருளாளர் கண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் முருகன், அசோக்குமார், தங்கச்சாமி,மாரீஸ்வரன், தொமுச நாகராஜன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் நாகராஜன்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன்,ஒன்றிய இளைஞரணி […]
கோவில்பட்டி சுகாதார மாவட்டம் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் வித்யா விஸ்வநாதன் ஆலோசனையின்படி இளையரசனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் ஜி.இலக்கியா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக டாக்டர்கள் எஸ். சரண்யா ஏ..தாய்லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் பி.சக்தி ரஞ்சன் சுகாதார ஆய்வாளர் ஏ.பாலசுப்பிரமணியன் மற்றும் மருந்தாளுனர், ஆய்வக நுட்பனர், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சித்தமருந்தாளுனர் உள்பட […]
சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் நெய்யில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் வி.ராஜா விஜயராகவன், கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள்,பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-‘ இந்த முறைகேடு 2 மாதங்களுக்குள் நடந்து உள்ளது. நிர்வாகத்தில் பொறுப்பில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இந்த முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. 2 மாதத்துக்குள் நெய் விற்பனையில் ரூ.35 லட்சத்துக்கும் மேல் முறைகேடு செய்யப்பட்டு இருப்பதால், நீண்ட காலத்தில் மற்றும் […]
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து விரைவில் பரிந்துரைகளை வழங்க எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி மத்திய அரசு அமைத்தது.முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், உள்துறை மந்திரி அமித்ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆயோக் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி.காஷ்யப், மூத்த […]







