இளையரசனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா
கோவில்பட்டி சுகாதார மாவட்டம் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் வித்யா விஸ்வநாதன் ஆலோசனையின்படி இளையரசனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் ஜி.இலக்கியா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக டாக்டர்கள் எஸ். சரண்யா ஏ..தாய்லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் பி.சக்தி ரஞ்சன் சுகாதார ஆய்வாளர் ஏ.பாலசுப்பிரமணியன்
மற்றும் மருந்தாளுனர், ஆய்வக நுட்பனர், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சித்தமருந்தாளுனர் உள்பட பலர் கலந்து கொண்டனர், விழாவில் விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,







