திமுக சார்பாக திராவிட சமத்துவ பொங்கல் விழா
கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பாக திராவிட சமத்துவ பொங்கல் விழா தாமஸ் நகர் சமுதாயத் திடலில் ஒன்றிய கழக செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

மாவட்ட மாணவரணி துணைஅமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், வழக்கறிஞர் ராமச்சந்திரன்,ஒன்றிய அவைத்தலைவர் பொன்னுச்சாமி,ஒன்றிய துணைச் செயலாளர் அழகுராஜ்,ஒன்றிய பொருளாளர் கண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் முருகன், அசோக்குமார், தங்கச்சாமி,மாரீஸ்வரன், தொமுச நாகராஜன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் நாகராஜன்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் உத்தரகுமார்,ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி, ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் பாலம்மாள், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார், கிளைக் கழகச் செயலாளர் ராஜதுரை கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கபடி வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.







