நின்ற லாரி மீது வேன் மோதி டிரைவர், கிளீனர் பரிதாப சாவு
கிருஷ்ணகிரி அருகே உள்ள இரத்தினபுரி கிராமத்தில் வசிப்பவர் திருப்பதி இவரது மகன் தனுஷ் (25). இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடன் கிருஷ்ணகிரி தோட்டகிரி கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் மாரியப்பன் (21) என்பவர் கிளீனர் ஆக வேலை செய்து வருகிறார்.
இருவரும் நேற்று கிருஷ்ணகிரியில் இருந்து பிக்கப் வேனில் ரோஜா மலர்களை ஏற்றிக் கொண்டு நெல்லை வந்தனர். அங்கு ரோஜா பூக்களை இறக்கிவிட்டு தூத்துக்குடிக்கு பூக்களை இறக்குவதற்காக நெல்லையிலிருந்து தூத்துக்குடி சென்று கொண்டிருந்தனர்.

வாகைகுளம் டோல்கேட் அருகே ஒரு ரெஸ்டாரன்ட் அருகில் வந்த போது ரோடு ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் பின்பக்கமாக பயங்கரமாக வேன் மோதியது.
.இதில் வேனின் முன் பகுதி லாரிக்குள் சென்று நசுங்கியது. இதில் இதில் வேனை ஓட்டி வந்த டிரைவர் தனுஷ் மற்றும் கிளீனர் மாரியப்பன் இருவரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.







