கோவில்பட்டி ரோட்டரி கிளப் 50 வது ஆண்டு தொடக்க விழா
கோவில்பட்டி ரோட்டரி கிளப் 50 வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் 15/1/1976 அன்று தொடங்கப்பட்டு 50 வது ஆண்டு வரை மக்களுக்கு பல சேவைகளை செய்துவருகிறது. உலகில் போலியோ என்ற கொடிய நோயை விரட்டி சரித்திர சாதனை படைத்துள்ளது.

தொடர்ந்து மக்கள் சேவை செய்துவரும் கோவில்பட்டி ரோட்டரி கிளப்பின் 50 வது ஆண்டு தொடக்க விழாவில் ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ஜி.ரமேஷ் ரோட்டரி பட்டயத்தை தற்போதைய தலைவர் ராஜ்குமார் மற்றும் செயலாளர் பழனி குமார் ஆகியோரிடம் வழங்கினார்.
விழாவில் ரோட்டரி சங்க சேவைகள் பற்றி பலரும் விளக்கி பேசினார்கள். ரோட்டரி உறுப்பினர்கள்,பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

.வரும் நாட்களில் சுகாதாரம் மற்றும் மருத்துவமனை உதவி, முதியோர் நலன் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவது என்று ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்,







