கோவில்பட்டியில் திருவள்ளுவர் ஜெயந்தி,பொங்கல் விழா
கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக திருவள்ளுவர் மன்றத்தில் திருவள்ளுவரின் 2057 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
திருவள்ளுவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ஜி. ரமேஷ் தலைமையில் ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார்,முன்னாள் மாவட்ட உதவி ஆளுநர்கள் முத்துசெல்வம், ஆசியாபார்ம்ஸ் பாபு ஆகியோர்முன்னிலை வகித்தார்கள்.

வள்ளுவரின் அவதார தினத்தை வரும் ஆண்டில் பெரிய விழாவாக கொண்டாட உறுதிமொழி எடுக்கப்பட்டது. ரோட்டரி செயலாளர் பழனிகுமார் நன்றி கூறினார்.
பொங்கல் விழா

கோவில்பட்டி ரோட்டரி கிளப் மற்றும் திருமால்நகர் குடியிருப்போர் நல சங்கம் இணைந்து பொங்கல் மற்றும் விளையாட்டு விழாவை நடத்தின. ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்,
மாவட்ட புரவலர் விநாயகா ஜி, ரமேஷ், முன்னாள் உதவி ஆளுநர்கள் முத்து செல்வம், லேப் சீனிவாசன், ஆசியா பார்ம்ஸ் பாபு, உறுப்பினர்கள் ரியல் எஸ்டேட் கண்ணன், முத்து முருகன்,நடராஜன்,வெங்கடேஷ்பாபு, மாரியப்பன்,ராஜமாணிக்கம், பிரபாகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை முன்னாள் ரோட்டரி தலைவர் தாமோதரகண்ணன் செய்திருந்தார். ரோட்டரி செயலாளர் பழனிகுமார் நன்றி கூறினார்.







