வங்கக்கடலில் நிலவும் வானிலை அமைப்பு நகர்ந்து வரும்போது நாளை மறுநாள் முதல் மாநிலத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனால் இரவு நேரங்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 2 நாட்களாக பல இடங்களில் பனி மூட்டமான காலை பொழுதும், இரவில் அதிக குளிரும் நிலவி வருகிறது.குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை திங்கட்கிழமையன்று விலகியதால் அடுத்த 2 நாட்களுக்கு […]
பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கோவிலில் மகா கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் நடத்த அறங்காவலர் குழுவினரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் அனுமதி பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்.30-ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, திருக்கோயில் நிதி ரூ.6.40 லட்சத்தில் பளிங்கு கற்கள் அகற்றப்பட்டு, கருங்கற்களில் நீர் பாய்ச்சி சுத்தம் செய்தல், […]
கோவில்பட்டி 1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான 25ம் தேதி கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் […]
தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில், அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது. கடந்த மாதம் 28-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு, பிறகு விறுவிறுவென இறங்கியது. அப்படியாக விலை குறைந்து வந்து, கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத்திலேயே தங்கம் விலை இருந்து வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் விலை உயர்ந்து இருந்தது. தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று […]
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி), மின்னணுவியல் துறை மற்றும் நிறுவன புதுமை கவுன்சில் இணைந்து தேசிய ஸ்டார்ட்அப் தின விழாவை கல்லூரி அரங்கில் நடத்தின. “ஸ்டார்ட்அப் என்பது ஒரு நிறுவனம் மட்டுமல்ல, அது ஒரு மனப்பாங்கு” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் மூலம் மாணவர்களிடையே தொழில் முனைவோர் சிந்தனையும் புதுமை மனப்பாங்கும் வளர்ப்பதே நோக்கமாகக் கொள்ளப்பட்டது. மின்னணுவியல் துறை உதவிப் பேராசிரியரும் நிறுவன புதுமை கவுன்சில் ஒருங்கிணைப்பாளருமான. ஹ. ராதாகிருஷ்ணன் வரவேற்று […]
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 25ம் தேதி காலை 5 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன,. இதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா இன்று (ஜனவரி 20) தொடங்கியது. காலை 7 மணிக்கு மேல் மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், விக்னேஷ்வர பூஜை, புன்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, மஹா கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், தன பூஜை, தான்ய […]
ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பை எதிர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று (செவ்வாய் கிழமை) சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன், பிரதீப் ராய் ஆஜரானார்கள், சென்சார் போர்டு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார்.சென்சார் போர்டு வாதிடுகையில் கூறப்பட்டதாவது:- சினிமோட்டோகிராபி சட்டப்படியும், […]
5 ஊராட்சி ஒன்றியங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கக் கோரி கோவில்பட்டியில் விவசாயிகள்
தென்னக மானாவாரி விவசாயிகள் சங்கத் தலைவர் பிரேம்குமார் தலைமையில், நிர்வாகிகள் சவுந்தரராஜன், செந்தில் குமார், விஜயகுமார், ஆதிமூலம், சந்திரசேகர், நாகராஜ், மாரியப்பன் மற்றும் விவசாயிகள் கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை திரண்டனர், கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட 5 ஊராட்சி ஒன்றிய பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து, அவர்கள், சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மணிகண்டனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட […]
கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் விதைப்பந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் அருண் குமார் மற்றும் கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் கலந்து கொண்டு விதை பந்துகளால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார். கல்லூரி மாணவ மாணவியருக்கு விதை பந்துகள் பற்றியும், அதன் மகத்துவம், எவ்வாறு தயாரிப்பது, விதை பந்துகள் […]
தமிழக சட்டசபையில் இன்று பேசத் தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். தொடர்ந்து. 4-வது ஆண்டாக அவர் வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சட்டசபையில் சபாநாயகர் மு.அப்பாவு வாசித்தார்.இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அரசின் நிறை குறைகளைப் பேசுவதற்கு கவர்னர் அரசியல்வாதி அல்ல. […]







