1 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்க கல்லூரி மாணவர்கள் உறுதியேற்பு

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் விதைப்பந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் அருண் குமார் மற்றும் கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் கலந்து கொண்டு விதை பந்துகளால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார்.

கல்லூரி மாணவ மாணவியருக்கு விதை பந்துகள் பற்றியும், அதன் மகத்துவம், எவ்வாறு தயாரிப்பது, விதை பந்துகள் செய்ய தேவையான மர விதைகளை எப்படி சேகரிப்பது, ஏன் இந்தியாவின் தென் முனைக்கு மழை தேவை என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
கல்லூரி மாணவர்கள் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தி வீணாக்கக்கூடிய எலுமிச்சை, சப்போட்டா, சீதா, புளி, வேம்பு, பேரிச்சை ஆகிய விதைகளை சேகரித்து 1 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்க வேண்டுமென்று எஸ்.எஸ். டி.எம் கல்லூரி மாணவர்கள் உறுதி ஏற்றனர்.
முன்னதாக, நம் கல்லூரி வளாகத்தில் அரச மரக்கன்று கல்லூரி மாணவியர்கள் கோகிலா, குமுத மலர், மற்றும் மரிய சந்தியா ஆகியோரால் நடப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக கல்லூரி மாணவி திவ்யஜோதி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெய்சிங் , கல்லூரி பேராசிரியர்கள் செல்வ லட்சுமி, கனகபிரபா, ரமேஷ், ஆனந்த் குமார் மற்றும் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் தலைவர் ஹரிகரசுதன் ஆகியோர் செய்து இருந்தனர்,.







