கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தொடக்கம்


கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 25ம் தேதி காலை 5 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் நடைபெறுகிறது.
இதையொட்டி கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன,. இதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா இன்று (ஜனவரி 20) தொடங்கியது. காலை 7 மணிக்கு மேல் மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், விக்னேஷ்வர பூஜை, புன்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, மஹா கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், தன பூஜை, தான்ய பூஜை கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜை நடைபெற்றது.

பஞ்சமுக விநாயகருக்கு அபிஷேகம், தீபாராதனை மஹா அனுக்ஞை பெறுதல் நடைபெற்றது.இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் கோவில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,
கும்பாபிஷேகம் நடைபெறும் வரை தினமும் பல்வேறு பூஜைகள் மற்றும் பூஜைகள் மற்றும் யாஜசாலை பூஜை நடக்கிறது.







