கோவில்பட்டி கல்லூரியில் தேசிய `ஸ்டார்ட்அப் தின’ கருத்தரங்கம்
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி), மின்னணுவியல் துறை மற்றும் நிறுவன புதுமை கவுன்சில் இணைந்து தேசிய ஸ்டார்ட்அப் தின விழாவை கல்லூரி அரங்கில் நடத்தின.
“ஸ்டார்ட்அப் என்பது ஒரு நிறுவனம் மட்டுமல்ல, அது ஒரு மனப்பாங்கு” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் மூலம் மாணவர்களிடையே தொழில் முனைவோர் சிந்தனையும் புதுமை மனப்பாங்கும் வளர்ப்பதே நோக்கமாகக் கொள்ளப்பட்டது.

மின்னணுவியல் துறை உதவிப் பேராசிரியரும் நிறுவன புதுமை கவுன்சில் ஒருங்கிணைப்பாளருமான. ஹ. ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி தலைமையுரையாற்றி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஸ்டார்ட்அப்களின் பங்கு குறித்து விளக்கி, மாணவர்கள் சுயதொழில் முனைவில் ஈடுபட வேண்டும் என ஊக்குவித்தார்.
சுயநிதிப்பாடப்பிரிவுகளின் இயக்குநர் மு பா. மகேஷ் குமார் பாராட்டுரையில்;, கல்வி நிறுவனங்கள் தொழில் முனைவோரை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என குறிப்பிட்டார்.
முதன்மை விருந்தினரை ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறையின், உதவிப் பேராசிரியர் எஸ். கோபிகா, அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக ஜெ. சிவதாசன், சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை இணைப் பேராசிரியர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் ஸ்டார்ட்அப் கலாச்சாரம், புதுமை சிந்தனை மற்றும் வெற்றிக்குத் தேவையான மனப்பாங்கு குறித்து மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் மின்னணுவியல் துறை உதவிப் பேராசிரியர் வீ.சிவராமசுப்பு நன்றி கூறினார்.







