கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனையின் பேரில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கல்லூரியின் எலக்ட்ரிகல் துறையின் நான்காம் ஆண்டு மாணவர் சௌந்திரபாண்டியன் வரவேற்று பேசினார்,. கல்லூரி . முதல்வர் . ரவீந்திரன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி பேசினார். கணிப்பொறியியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவி […]
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் சமூக ஊடகங்கள் மூலம் குறிப்பாக Telegram, Instagram, Snapchat மற்றும் WhatsApp மூலமாக போலியான முதலீடு மற்றும் ஆன்லைன் வர்த்தக திட்டங்களை பரப்பி வருகின்றனர். இந்த வகை மோசடிகளில் குற்றவாளிகள் Telegram மூலம் பொதுமக்களை தொடர்புகொண்டு, அதிக லாபம் கிடைக்கும் என்று உறுதி அளித்து முதலீடு செய்ய தூண்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக, […]
ஒருவருக்கொருவர் உடன்பாடு இல்லாதவர்கள் இணைந்தால், அந்த கூட்டணி எப்படி வெற்றிபெறும்? – கனிமொழி
“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” – திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு, வரும் 26/01/2026 அன்று தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு அருகிலுள்ள திருமலை சமுத்திரம் பகுதியில் நடைபெறவுள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார். திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே. எண். நேரு முன்னிலையில் இந்த மாநாடு […]
திமுகவில் இணைய குடும்பத்தினர் எதிர்ப்பு, அரசியலில் இருந்தே விலகுகிறேன்; குன்னம் ராமச்சந்திரன் அறிவிப்பு
திமுகவில் இணையப்போவதாக கூறியிருந்த குன்னம் ராமச்சந்திரன், அரசியல் பொதுவாழ்வில் இருந்து விலக முடிவு எடுத்திருப்பதாக திடீரென அறிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான வைத்திலிங்கம் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.வில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து குன்னம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தி.மு.க.வில் இணையப்போவதாக கூறப்பட்டது. அவரும் அதை உறுதி செய்தார். இந்த நிலையில், அரசியலில் பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக குன்னம் ராமச்சந்திரன் இன்று திடீரென அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று காலை வீடியோ […]
5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வருகிற 27-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- “எல்.ஐ.சி. நிறுவனத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை வழங்கிய மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது. மேலும், வங்கி ஊழியர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, வேலை நேரத்தை முறைப்படுத்துதல், ஓய்வூதியத்தை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை […]
மத்தியமந்திரி பியூஸ் கோயல் , தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கு அதிமுக பொதுச்செயலாளர்எடப்பாடிபழனிசாமி காலை உணவு விருந்து அளித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இந்த உணவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறியதாவது: – எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் காலை உணவு அருந்தினேன். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழக நலனுக்காக திமுக அரசு எதுவும் […]
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு தன்னாட்சிக் கல்லூரியில் ஆங்கிலத்துறையின் லிங்குவாகாலிக் மொழி மேம்பாட்டு அமைப்பு மற்றும் தேசிய மாணவர் படை இணை முயற்சியில், குடியரசுத் தினத்தை முன்னிட்டு ‘டாலன்ட் ஷோ – 2026’ எனும் துறைகளுக்கிடையே போட்டிகள் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது இந்நிகழ்வின் தொடக்கமாக இயற்பியல் துறை உதவி பேராசிரியர் அங்குமலர் வரவேற்புரை வழங்கினார். கல்லூரிச் செயலர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுப்புலெட்சுமி முன்னிலை வகித்து குடியரசுத் தினத்தின் முக்கியத்துவம், இந்திய அரசியலமைப்பின் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவர் பெருமாள் சாமிக்கு கோவில்பட்டியில் வரவேற்பு;
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவராக பெருமாள்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். பதவி நியமனத்துக்கு பிறகு முதல் முறையாக இன்று கோவில்பட்டி வந்த பெருமாள் சாமிக்கு காங்கிரசார் பிரமாண்ட வரவேற்பு அளித்தனார். கோவில்பட்டியில் உள்ள அனைத்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், கோவில்பட்டி வட்டார தலைவர் ரமேஷ்மூர்த்தி ஆகியோர் தலைமையில் வரவேற்பு ஏற்பாடுகள் நடந்தன. காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் அழ்வார்சாமி, கயத்தார்,வட்டார தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் […]
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் இன்று விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிரிஜா தலைமை தாங்கினார்.. சார் ஆட்சியர் ஹூமான்சூ மங்கள், டிஎஸ்பி ஜெகநாதன் ஆகியோர் சாலை பாதுகாப்பு தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு வழங்கி […]
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன்; சசிகலா அறிக்கை
வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் எடுத்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். இதனை அவரோடு இத்தனை காலம் உடன்பயணித்தவர்கள், ஏன் அவரது தொகுதியை சார்ந்த பொதுமக்கள் கூட இந்த முடிவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது ஒரு சிலரின் சுயநலத்தால் நடப்பதே தவிர வேறொன்றுமில்லை. […]







