தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவர் பெருமாள் சாமிக்கு கோவில்பட்டியில் வரவேற்பு; கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பு
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவராக பெருமாள்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி நியமனத்துக்கு பிறகு முதல் முறையாக இன்று கோவில்பட்டி வந்த பெருமாள் சாமிக்கு காங்கிரசார் பிரமாண்ட வரவேற்பு அளித்தனார்.
கோவில்பட்டியில் உள்ள அனைத்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், கோவில்பட்டி வட்டார தலைவர் ரமேஷ்மூர்த்தி ஆகியோர் தலைமையில் வரவேற்பு ஏற்பாடுகள் நடந்தன.

காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் அழ்வார்சாமி, கயத்தார்,வட்டார தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் துரைராஜ்,மாவட்ட பொருளாளர் கார்த்தி காமராஜ்,ஐஎன்டியூசி ராஜாசேகரன்,ஜான்பிரிட்டோ,உமாசங்கர்,வழக்கறிஞர்கள் மகேஷ்குமார், அய்யலுசாமி, ராஜா,ஜேம்ஸ் லாரன்ஸ்,பெத்துராஜ், சுப்பராயிலு, பேரையா, செல்லதுரை, விஜயராஜ்,சக்திவிநாயகம், சுடலைமணி, குணசேகரன், மரியதங்கராஜ், கந்தசாமி, மாரியம்மாள், நல்லமதி,குணா சேகரன், மரியசூசை ராஜ்,பிச்சைகனி,சோலைராஜ், சந்தனபாண்டியன்,பிரபாகரன், சுந்தர்ராஜ், தட்சணாமூர்த்தி, சுரேஷ், போத்திராஜ், பெரியசாமி, பாலமுருகன்,செல்லப்பா, மணி, வேல்சாமி, அந்தோணி முத்து, கோபால், முத்துராமலிங்கம், அரவிந்த், ஆறுமுகம்உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வரவேற்பை தொடர்ந்து,காந்தி மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :-

*கோவில்பட்டி வீர வாஞ்சி நகர், வள்ளுவர் நகர் பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு அரசு உடனே பட்டா வழங்க வேண்டும், *கழுகுமலை, கயத்தார், எட்டயபுரம், விளாத்திகுளம் அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட வேண்டும்,
*கயத்தார் பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், *கோவில்பட்டி போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணி காலியாக உள்ளது. உடனடியாகபணியை நிரப்ப வேண்டும்,
*கோவில்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பு உள்ள சிக்னல் பல நாட்கள் பழுதாகி உள்ளது அதனை விரைந்து சரி செய்ய வேண்டும்,

*.கயத்தார் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், *அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதி திராவிட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பட்டாவை உடனே வழங்க வேண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அளவு குறைவாக உள்ள காரணத்தால் தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி பூமியாக அறிவிக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப் படவிட்டால் உடனே தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது







