கோவில்பட்டி கல்லூரியில் மாணவ, மாணவிகளின் ‘டாலன்ட் ஷோ’

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு தன்னாட்சிக் கல்லூரியில் ஆங்கிலத்துறையின் லிங்குவாகாலிக் மொழி மேம்பாட்டு அமைப்பு மற்றும் தேசிய மாணவர் படை இணை முயற்சியில், குடியரசுத் தினத்தை முன்னிட்டு ‘டாலன்ட் ஷோ – 2026’ எனும் துறைகளுக்கிடையே போட்டிகள் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
இந்நிகழ்வின் தொடக்கமாக இயற்பியல் துறை உதவி பேராசிரியர் அங்குமலர் வரவேற்புரை வழங்கினார். கல்லூரிச் செயலர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுப்புலெட்சுமி முன்னிலை வகித்து குடியரசுத் தினத்தின் முக்கியத்துவம், இந்திய அரசியலமைப்பின் மதிப்புகள் மற்றும் மாணவர்களின் சமூகப் பொறுப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.

குடியரசுத் தினத்தை முன்னிட்டு கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வரைதல், ஸ்பெல் பீ மற்றும் தனிநடிப்பு போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் படைப்பாற்றல் மற்றும் மொழித் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, ஆங்கிலத் துறை (உதவிபெறும்) தயாரித்த முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு ஆங்கிலப் பாடநூல்கள் வெளியிடப்பட்டன.
ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர். ரா. சரவண செல்வக்குமார் பேசுகையில் ” இப்பாடநூல்கள் மாணவர்களின் மொழித் திறனை மேம்படுத்துவதோடு, பாடத்திட்டத்தை எளிதில் புரிந்து கொள்ளவும், போட்டித் தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் வகையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது ” என்றார்.

இந்நூல்கள் மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பாராட்டப்பட்டது.
பின்னர், “லிங்குவாகாலிக் மொழி மேம்பாட்டு அமைப்பில்” மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். அம்மாணவர்கள் இந்த அமைப்பில் இணைவது குறித்து தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வின் முடிவில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர், அ. காயத்ரி நன்றி கூறினார்.







