சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் இன்று விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிரிஜா தலைமை தாங்கினார்.. சார் ஆட்சியர் ஹூமான்சூ மங்கள், டிஎஸ்பி ஜெகநாதன் ஆகியோர் சாலை பாதுகாப்பு தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு வழங்கி போக்குவரத்து விதிமுறைகளை விளக்கினர்.

கலைக் குழுவினர் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு பாடல்கள் பாடி நடனம் ஆடி துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன்ராஜ், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்ஸ் மாசிலாமணி, கழுகுமலை 1008 மகாவீரர் அதிசய ஷேத்திர கமிட்டி செயலாளர் ரித்திக் ஜெயின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேருந்து நிலையத்துக்கு வெளியே இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்







