ஒருவருக்கொருவர் உடன்பாடு இல்லாதவர்கள் இணைந்தால், அந்த கூட்டணி எப்படி வெற்றிபெறும்? – கனிமொழி எம்.பி.
“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” – திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு, வரும் 26/01/2026 அன்று தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு அருகிலுள்ள திருமலை சமுத்திரம் பகுதியில் நடைபெறவுள்ளது.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார். திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே. எண். நேரு முன்னிலையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
செங்கிப்பட்டிக்கு அருகிலுள்ள திருமலை சமுத்திரம் பகுதியில் நடைபெறவுள்ள மாநாட்டில் சுமார் 1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், மாநாட்டுக்கான நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை கனிமொழி எம்.பி.இன்று (22/01/2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி. கூறியதாவது:-
தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்த கேள்விக்கு, எங்களுடைய கூட்டணி மக்களுடன் இருக்கக்கூடிய கூட்டணி, முதலமைச்சர் பல ஆண்டுகளாக மக்களுக்காக செய்த சாதனையை உணர்ந்த கூட்டணியாகும். அதனால், திமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.
ஒருவருக்கொருவர் உடன்பாடு இல்லாதவர்கள் இணைந்தால், அந்த கூட்டணி எப்படி வெற்றிபெறும்?”
இவ்வாறு அவர் கூறினார்.







