கோவில்பட்டி கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனையின் பேரில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கல்லூரியின் எலக்ட்ரிகல் துறையின் நான்காம் ஆண்டு மாணவர் சௌந்திரபாண்டியன் வரவேற்று பேசினார்,.
கல்லூரி . முதல்வர் . ரவீந்திரன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி பேசினார்.

கணிப்பொறியியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவி விஜயலட்சுமி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை தலைவர்களும், பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கல்லூரியின் சாலைப் பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் உமாசங்கர், பிரசாந்த், மற்றும் நிர்வாகிகள் கருப்பசாமி கார்த்திக், முத்துப்ரியா, ஹரிமகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.







