தூத்துக்குடி தருவைகுளம் விளையாட்டு அரங்கத்தில் 77 வது குடியரசு தின விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் முன்னிலையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து தூத்துக்குடி பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆயுதப்படை காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் 10 வருடங்கள் சிறப்பாக பணிபுரிந்த 110 காவல்துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம், தூத்துக்குடி மாவட்டத்தில் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் பாஸ் வழங்குவதில் குளறுபடி: அதிகாரிகள் மீது
கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவநாத சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்ற நிலையில், மண்டகப்படிதார்களுக்கு பாஸ் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து போராட்டங்களும் நடைபெற்றன. இந்த நிலையில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு இது பற்றி கூறியதாவது: கோவில்பட்டியில் உள்ள பொதுமக்கள் தொழிலதிபர்கள் முழு ஒத்துழைப்புடன் நன்கொடையாளர்களின் உதவிகளுடன் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. \ இந்த விழாவில் நன்கொடையாளர்கள், மண்டக படிதாரர்கள் மற்றும் முக்கிய […]
77-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கவர்னர் ஆர்.என். ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்ட விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்விவரம் வருமாறு:- வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம்:- நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்புத்துறை ஓட்டுனர் சங்கர். தீயணைப்பு துறையைச் […]
நாட்டின் 77 வது குடியரசு தினம் இன்று ஜனவரி 26 கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவில்பட்டியில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள்,தனியார் தொண்டு நிறுவனங்கள் குடியிருப்போர் நலசங்கத்தினர் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் தேசிய கொடியேற்றி குடியரசு தினம் கொண்டாடினார்கள். கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் 77வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கணிதவியல் துறையின் மூத்த இணைப் பேராசிரியர் எ.சுசிலா தேசியக் கொடியை ஏற்றினார். கல்லூரியின் தேசிய மாணவர் அணி வகுப்பு மரியாதையைத் தொடர்ந்து […]
வடநாட்டு அரசியல் குறித்தும் அங்கு நேரப்போவதாக நம்பப்படும் ஒரு திருப்பம் குறித்தும் ரஜினி சொன்னதாக வைரமுத்து பதிவிட்டுள்ளார். அதில்,கூறி இருப்பதாவது:-‘‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று எனது இல்லத்திற்கு வருகை தந்தார். ‘பாசமுள்ள மனிதனப்பா – நான் மீசவச்ச குழந்தையப்பா’ என்ற வரிகளுக்கு இப்போதும் அவர்தான் இலக்கியமாக இலங்குகிறார், வியப்புக்குரிய மனிதர்தான். அடித்துக்கொண்டோடும் அரசியல் வெள்ளம், சாய்த்துவிட்டோடும் சமூகப் புயல் இரண்டையும் அரைநூற்றாண்டாய்க் கடந்து தன்னிடத்தை ஒருவர் தக்கவைத்துக் கொள்வது ஜாதகத்தால் ஆவதல்ல; சாமர்த்தியத்தால் ஆவது.உணவு முறை உடல் […]
கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 ஆண்டு பழைய மாணவர் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனன ஆகியவை இணைந்து மாதம் தோறும் நான்காவது ஞாயிறு அன்று இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தி வருகின்றன. அந்த வகையில் ஜனவரி மாத கடைசி ஞாயிறு ( 25-01.26 ) அன்று கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயிண்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு […]
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் ஏரல் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 26) என்பவர் சம்பந்தப்பட்டு இருந்தார்,. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர். தங்கராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் சிபாரிசு செய்தார். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இல்ம்பகவத் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று(ஜனவரி 25) கொலாகலகமாக நடைபெற்றது/ அதிகாலையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரவிலேயே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கோவில் பகுதி பக்தர்கள் வந்து செல்ல வசதி செய்யப்பட்டு இருந்தது. கும்பாபிஷேகம் முடிந்து கோவிலுக்கு நாள் முழுவதும் பக்தர்கள் வருகை இருந்ததால் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு வசதியாக அன்ன தானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கிடையே கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக 52 வது மாதம் அன்னதானம் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; அதிகாலையிலும் பக்தர்கள்
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று 25ம் தேதி காலை கோலாகலமாக நடைபெற்றது. கோவில் கோபுரம் மின்னொளியில் ஜொலித்தது,. கும்பைஷேகத்தை முன்னிட்டு கோவில் உபயதாரர்கள் சார்பில் திருப்பணிகள் நடத்தப்பட்டது. கோவில் சிற்பங்களுக்கு பெயிண்டிங், சுவாமி சன்னதி புதுப்பித்தல். தரை கற்கள் பதிதல், கோபுரர சிற்பங்களுக்கு பெயிண்டிங் என திருப்பணிகள் நடந்து கோவில் புதுபிக்கப்பட்டது,. இதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 20.01.2026 அன்று தொடங்கியது.,. தினமும் […]
தூத்துக்குடி, மேலவேலாயுதபுரத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 23). இவர் மீது புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார். சம்பவத்தன்று இவர் தாளமுத்துநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அரிவாளை காட்டி தகராறில் ஈடுபட்டு உள்ளார். தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று பிரவீன்குமாரை பிடிக்க முயன்றனர். அப்போது ஆத்திரமடைந்த அவர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜாவை அரிவாளால் வெட்ட முயன்றார். இதையடுத்து பிரவீன் குமாரை சுற்றி வளைத்து […]







