தூத்துக்குடியில் குடியரசு தின விழா; ஆட்சியர் இளம் பகவத் தேசிய கொடி ஏற்றினார்
தூத்துக்குடி தருவைகுளம் விளையாட்டு அரங்கத்தில் 77 வது குடியரசு தின விழா இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் முன்னிலையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து தூத்துக்குடி பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆயுதப்படை காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் 10 வருடங்கள் சிறப்பாக பணிபுரிந்த 110 காவல்துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம், தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், அமைச்சுபணியாளர்கள் உட்பட 60 காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் பெற்ற காவல்துறையினரையும், மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற காவல்துறையினரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் பாராட்டினார்.







