• March 6, 2026

கோவில்பட்டி அருகே கடலையூர் தியாகிகள் நினைவு ஸ்தூபியில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

 கோவில்பட்டி அருகே கடலையூர் தியாகிகள் நினைவு ஸ்தூபியில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

கோவில்பட்டி அருகே கடலையூர் கிராமத்தில்  சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில் 34 பேர் கலந்து கொண்டனர். 

இந்த சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த அந்த 34 தியாகிகளை நினைவு கூரும் வகையில் அங்கு நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு ஸ்தூபியில், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

 கட்சியின் நகரத் தலைவர் அருண்பாண்டியன், வட்டாரத் தலைவர்கள் ரமேஷ் மூர்த்தி, வடக்கு மாவட்ட பொருளாளர் கார்த்திக் காமராஜ், பொதுச்செயலாளர்கள் சுப்புராயலு, ராஜசேகரன், கட்சியின் எஸ்.சி. எஸ்.டி., பிரிவு மாநில துணைத்தலைவர் மாரிமுத்து, கட்சி நிர்வாகிகள் ஆழ்வார்சாமி,ராஜா,பெரியசாமி, பேரையா, பெத்துராஜா,பால்ராஜ், ஜோஸ்வா, மகளிர் காங்கிரஸ் நல்லமதி, இளைஞர் காங்கிரஸ் சுடலைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து, கடலையூர் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களை கவுரவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *