வங்கித்தேர்வு எழுதும் கல்லூரி மாணவ, மாணவிகள்; கோவிலில் சிறப்பு பூஜை
தமிழ்நாடு மெர்க்கென்டைல் வங்கிக்கான தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில் கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியை சார்ந்த 60 மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி கல்லூரி நிர்வாகத்தால் அளிக்கப்பட்டு தேர்வுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வு எழுதக்கூடிய மாணவ மாணவிககள் வெற்றி பெற கோவில் தர்மகர்த்தா மாரியப்பன், கல்லூரி செயலாளர் கண்ணன் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் கோவில்பட்டி மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது.
வங்கி தேர்வு எழுதக்கூடிய மாணவ மாணவியர்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச்சீட்டினை அம்மனுடைய பாதத்தில் வைத்து பூஜை செய்தனர். இந்த பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு பூஜையில் கல்லூரி முதல்வர் செல்வராஜ் கோவில் கமிட்டி உறுப்பினர் பாலமுருகன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ராம ஜெயா, பிரியங்கா,, பிரபாகரன்,, ரீத்திகா, பாரதி,, கல்லூரி அலுவலக உறுப்பினர் கருப்பசாமி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.







