இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் செல்லக்கூடிய 281 விமானங்கள் ரத்து
இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தின. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், பல்வேறு நாடுகள் தங்கள் வான்பரப்பை மூடியுள்ளன.

இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளுக்கான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். பல்வேறு வளைகுடா நாடுகள் தங்கள் வான்பரப்பை மூடியுள்ளதால் இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு செல்லும் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இந்தியாவில் இருந்து நேற்று மத்திய கிழக்கு வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு புறப்படவிருந்த 281 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.







