கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் பாஸ் வழங்குவதில் குளறுபடி: அதிகாரிகள் மீது அறங்காவலர் குழு தலைவர் குற்றச்சாட்டு
கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவநாத சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்ற நிலையில், மண்டகப்படிதார்களுக்கு பாஸ் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து போராட்டங்களும் நடைபெற்றன.
இந்த நிலையில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு இது பற்றி கூறியதாவது:

கோவில்பட்டியில் உள்ள பொதுமக்கள் தொழிலதிபர்கள் முழு ஒத்துழைப்புடன் நன்கொடையாளர்களின் உதவிகளுடன் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது.
\ இந்த விழாவில் நன்கொடையாளர்கள், மண்டக படிதாரர்கள் மற்றும் முக்கிய விஐபிகளுக்கு பாஸ் வழங்குவது குறித்து கோவில் ஆய்வாளர் சிவகளை பிரியா, கோவில் செயல் அலுவலர் பாலமுருகன் அறங்காவலர் குழு உடன் எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை.
நன்கொடையாளர்கள் மற்றும் மண்டக படிதார்களுக்கு பாஸ் வழங்குவது குறித்து அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கேட்டபோது இரு அதிகாரிகள் அறங்காவலர் குழு உறுப்பினர்களை கேவலமாக அவமானப்படுத்தியதால் எங்களுக்கு கடூம் மன வேதனை ஏற்பட்டது. ஆனால் வெளியே பாஸ் அனைத்தையும் எங்களிடம் வழங்கப்பட்டு விட்டதாக ஒரு பொய்யான தகவலை பரப்பி உள்ளனர்.

அதுமட்டுமின்றி சார் ஆட்சியர் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் பாஸ் கொடுக்க கூடாது என்று கூறியதாக கோவில் செயல் அலுவலர் தவறான தகவலை வெளியிட்டார். அறங்காவலர் குழு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க நன்கொடை வழங்கிய பலருக்கும் தங்களால் பாஸ் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
எனவே பாஸ் விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவில் செயல் அலுவலர் சிவகளைப் பிரியா 8 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு பணியாற்றி வருகிறார். எனவே . அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்,







