கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; அதிகாலையிலும் பக்தர்கள் குவிந்தனர்


கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று 25ம் தேதி காலை கோலாகலமாக நடைபெற்றது. கோவில் கோபுரம் மின்னொளியில் ஜொலித்தது,.
கும்பைஷேகத்தை முன்னிட்டு கோவில் உபயதாரர்கள் சார்பில் திருப்பணிகள் நடத்தப்பட்டது. கோவில் சிற்பங்களுக்கு பெயிண்டிங், சுவாமி சன்னதி புதுப்பித்தல். தரை கற்கள் பதிதல், கோபுரர சிற்பங்களுக்கு பெயிண்டிங் என திருப்பணிகள் நடந்து கோவில் புதுபிக்கப்பட்டது,.
இதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 20.01.2026 அன்று தொடங்கியது.,. தினமும் காலை, ,மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன., யாகசாலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் பிரமாண்ட அளவில் நடைபெற்றது.

நேற்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மங்கள வாத்தியம். திருமுறை பாராயணம், விசேஷசந்தி, பூதளரித்தி, அந்தர்யாகம், கிராமப்ரக்ஷணம், விக்னேஷ்வர பூஜை, புன்யாஹவாசனம். ஈந்தாம் கால யாகசாலை பூஜை, திரவியாதி மஹா பூர்ணாஹதி தீபாராதனைநடைபெற்றது,
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு | மாங்களவாத்தியம், திருமுறை பாராயணம். விக்னேஷ்வர பூஜை ,சோமகும்ப பூஜை, ரக்சா பந்தன்பூஜை ,சூரிய கும்பபூஜை ஆறாவது கால யாகசாலை பூஜை, புர்சாஹூதி நாடி சந்தானம், ஷண்ணவதி| ஹோமம். மஹாபூர்ஹ்தி யாத்ரா தானம், தீபாராதனை நடைபெற்றது,
அதிகாலை 5 முதல் 5.50 மணிக்குள் ராங்கோபுரம், சாலகோபுரம், விமானங்கள், செண்பகவல்லியம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் கலசங்களில் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் ,முடிந்தவுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது,.

கும்பாபிஷேகம் காண கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். கும்பாபிஷேக விழாவில் சிவாச்சாரியார்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர், முக்கிய பிரமுகர்கள் பலரும் வந்து இருந்தனர்,.
காலை 10 மணிக்கு மேல்| மஹா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது,.கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து இருந்தனர்.

கோவில் நன்கொடையாளர்கள பலருக்கு கும்பாபிஷேக சிறப்பு அனுமதி சீட்டு தரவில்லை என்ற புகார் எழுந்தது. இந்த அனுமதி சீட்டுகளை தனியாருக்கு ரூ.500 ரூ.1௦௦௦ என்று வீற்று விட்டதாக புகார் கூறி சம்பந்தப்பட்டவர்கள் கோவில் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்,. போலீசார் சமரசம் செய்து வைத்தனர்,.
Iமேலும் இந்து அறநிலையத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே மூலவர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை செய்ய வேண்டும் என்று அர்ச்சர்களை கட்டாயப்படுத்தி செய்ய வைத்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.







