கோவில்பட்டியில் கும்பாபிஷேகம்:பல்வேறு இடங்களில் அன்னதானம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று(ஜனவரி 25) கொலாகலகமாக நடைபெற்றது/ அதிகாலையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரவிலேயே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கோவில் பகுதி பக்தர்கள் வந்து செல்ல வசதி செய்யப்பட்டு இருந்தது.
கும்பாபிஷேகம் முடிந்து கோவிலுக்கு நாள் முழுவதும் பக்தர்கள் வருகை இருந்ததால் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு வசதியாக அன்ன தானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதற்கிடையே கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக 52 வது மாதம் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கரநாராயணன் மலரகம் செல்வம் வரவேற்றார்.
நகர்மன்ற உறுப்பினர்கள் சண்முகவேல் ,லவராஜா ,மகாலட்சுமி ஆட்டோ கன்சல்டிங் காளிராஜ், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆசிரியர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சரவணா ஸ்டோர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.. சிறப்பு அழைப்பாளர்களாக அருண் பேக்கரி அண்ட் ஸ்வீட்ஸ் மாடசாமி, கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்கத் தலைவர் கார்த்தீஸ்வரன், நாட்டு மருந்து கடை பெரியசாமி , கேட்டரிங் சர்வீஸ் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கணேசன் பொங்கல் பிரசாதம் வழங்கினார். காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் அவர்கள் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, பொருளாளர் கார்த்திகேயன் , ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், பாலமுருகன் ,எஸ் பி பாண்டியன் ,தங்கராஜ் மிலிட்டரி சந்திரசேகர், ஆசிரியர் அன்பழகன், நாகஜோதி மேனேஜர் பாலமுருகன், பசுமை இயக்கம் செந்தில் ,ஏழாயிரம் பண்ணை பாண்டியன், வரதராஜன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஜுவல்லர்ஸ் அதிபர் கதிரேசன் நன்றி கூறினார்







