கொலை முயற்சி வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் ஏரல் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 26) என்பவர் சம்பந்தப்பட்டு இருந்தார்,.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர். தங்கராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் சிபாரிசு செய்தார்.

அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இல்ம்பகவத் உத்தரவின் பேரில் கருப்பசாமியை இன்று (25.01.2026) போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.







