கோவில்பட்டி முகாமில் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு 16 பேர் தேர்வு
Oplus_16908288
கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 ஆண்டு பழைய மாணவர் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனன ஆகியவை இணைந்து மாதம் தோறும் நான்காவது ஞாயிறு அன்று இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தி வருகின்றன.
அந்த வகையில் ஜனவரி மாத கடைசி ஞாயிறு ( 25-01.26 ) அன்று கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயிண்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஜி ஜெயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் என்.ராஜவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன், ராஜேந்திரன், கே.மணிக்கொடி, பாலசுப்ரமணியன்,திருச்சிற்றம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனார்.
முகாமில் 88 பேர் கண் பரிசோதனை செய்துகொண்டனர். இவர்களில் கண்புரை இலவச அறுவை சிகிச்சைக்கு 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அரவிந்த் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.







