கோவில்பட்டியில் குடியரசு தின கொண்டாட்டம்
நாட்டின் 77 வது குடியரசு தினம் இன்று ஜனவரி 26 கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவில்பட்டியில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள்,தனியார் தொண்டு நிறுவனங்கள் குடியிருப்போர் நலசங்கத்தினர் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் தேசிய கொடியேற்றி குடியரசு தினம் கொண்டாடினார்கள்.
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் 77வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கணிதவியல் துறையின் மூத்த இணைப் பேராசிரியர் எ.சுசிலா தேசியக் கொடியை ஏற்றினார்.

கல்லூரியின் தேசிய மாணவர் அணி வகுப்பு மரியாதையைத் தொடர்ந்து கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் குடியரசு தினவிழா உரையாற்றினார். மேலும் கல்லூரி முதல்வர்(பொ) மூ.சுப்புலெட்சுமி, இயக்குநர் (பொ) பா.மகேஷ்குமார் ஆகியோர் “மொழித்திறன் மேம்பாட்டு அமைப்பின்” சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரால் “தேசிய கல்வி அறிவுக்குழுவின் சிறந்த ஒருங்கிணைப்பாளர்” என்ற பாராட்டுச் சான்றினைப் பெற்ற இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் க.அங்குமலர் ,சிறந்த தூதுவர் சான்றினைப் பெற்ற மாணவர்களை கவுரவித்தனர்.
விழா ஏற்பாட்டினை உடற்கல்வி இயக்குநர் தி.கோதையம்மாள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தார்கள்.
ரோட்டரி கிளப்

கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக இன்று பங்களா தெருவில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் குடியரசு தினவிழா& கொடியேற்று விழா கொண்டாடப்பட்டது. ரோட்டரி கிளப் தலைவர் ராஜ்குமார் தலைமையில் மாவட்ட புரவலர் விநாயகா ஜி.ரமேஷ்,முன்னாள் மாவட்ட உதவி ஆளுநர் முத்துசெல்வம், பாபு ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்கு களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.முடிவில் செயலாளர் பழனி குமார் கூறினார்,.
எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 77 வது குடியரசு தின விழா நடந்தது. கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.
நாடார் உறவின்முறைச்சங்க பொருளாளர் சுரேஷ்குமார், பத்திரகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.
நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஆர்.எஸ் ரமேஷ் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண்,ராஜமோகன்,
சரவணகுமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு

கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
அரசியல் சட்டத்தின் விழுமியங்களான ஜனநாயகம், மதசார்பின்மை, கூட்டாட்சி, பன்முகத்தன்மை ஆகியவற்றை பாதுகாக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது
இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் மாநிலத் துணைத் தலைவர் அபிராமி முருகன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் குடியரசு நாள் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், மனித நேய மக்கள் கட்சி செண்பகராஜ், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், மக்கள் நல அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகன், முத்துராஜ், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மேரி ஷீலா, தொழிலதிபர் ராமலக்ஷ்மி, பகத்சிங் ரத்த தான கழகம் காளிதாஸ், லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







