பிரிட்டிஷ் அரசை எதிர்த்து இந்திய நாட்டின் விடுதலைக்காக அகிம்சா வழியில் மதவெறி மற்றும் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடிய அண்ணல் காந்தியடிகள் நினைவு நாள் இன்று(ஜனவரி 30) கடைபிடிக்கப்பபடுகிறது. இதை முன்னிட்டு கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி உருவச்சிலைக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்துப்பட்டது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமையில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு நிர்வாகி மேரிஷீலா காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்பு நடந்த […]
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி அலுவலர்களால் விநியோகம் செய்யப்பட்ட படிவங்கள் அனைத்தும் பெறப்பட்ட நிலையில் கடந்த டிச. 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. வரைவு வாக்காளர் பட்டியலில், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதனால் 6,41,14,587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 5,43,76,756-ஆகக் குறைந்தது. வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டவா்கள் பெயா் […]
தூத்துக்குடியைச் சேர்ந்த திருநம்பி வசந்தகுமார் (வயது 20) என்பவர் கடந்த 9.11.2025 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை தாக்கி அவர் அணிந்திருந்த அணிகலன்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து வசந்த்னகுமாரை தேடி கண்டுபிடித்து கைது செய்தன்ர்,. பின்னர் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் – 11 ல் […]
தூத்துக்குடியைச் சேர்ந்த நேக்சன் (வயது 20) என்பவர் கடந்த 2024ம் ஆண்டு தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் – III ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி த […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா இளைஞரணி தலைவர் கனி தலைமையில் தமாகா வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால், ம பொருளாளர் செண்பகராஜ், செயலாளர் அய்யாத்துரை, இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் பொன்ராஜ், மாவட்ட நிர்வாகி சக்திவேல், ஒன்றிய நிர்வாகி பாரதி மற்றும் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துநகர் பகுதியை சேர்ந்த மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் சார் ஆட்சியர் ஹூமான்ஷூ மங்களிடம் வழங்கிய மனுவில்,கூறி இருந்ததாவது:- “கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் திட்டங்குளம் ஊராட்சிக்கு […]
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சமீப நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் online scams நடைபெற்று வருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல்(Facebook) போன்ற சமூகவலைதளங்களில் பரப்பப்படும் போலி பகுதி நேர வேலைவாய்ப்பு மூலம் பொதுமக்கள் குறிவைக்கப்படுகின்றனர். இவ்வகை மோசடியில் Google Maps-ல் hotels மற்றும் productsக்கு like அல்லது review செய்வது, profiles அல்லது cars-க்கு review போடுவது, mobile apps அல்லது websitesல் வழங்கப்படும் books மற்றும் novels […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வருஷாபிஷேக விழா 31.1.2026 சனிக்கிழமை, நடக்கிறது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, வேத பாராயணம், ஸ்ரீமகா கணபதி ஹோமம், ஸ்ரீருத்ர ஹோமம், பரிவார மூர்த்திகளுக்கு மூலமந்த்ர ஹோமம், அஸ்திர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி மகாபிஷேகம் நடக்கிறது. காலை 10.35 மணி முதல் 11.30 மணிக்குள் கோவில் விமானகோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருஷாபிஷேக மகா […]
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் “தொழில்முனைவோர் புதுமைகளை இயக்குதல்: வடிவமைப்பு சிந்தனை & தொடக்க வணிக மாதிரிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. தொழில் துறை தொடர்பு மைய ஒருங்கிணைப்பாளரும், வர்த்தகத் துறை உதவிப் பேராசிரியருமான மா. வைரவன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் தலைமை உரையை கல்லூரி முதல்வர். மூ.சுப்புலெட்சுமி வழங்கி, மாணவர்கள் புதிய யோசனைகள், வடிவமைப்பு சிந்தனை மற்றும் தொடக்க தொழில் மாதிரிகள் குறித்து ஆழ்ந்த புரிதலை பெற வேண்டும் என அறிவுறுத்தினார். சுயநிதிப் […]
கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி கோட்ட மின்வாரிய உபமின்நிலையங்களில் ஜனவரி மாதத்திற்கான பராமரிப்பு பணிகள் 31-ம் தேதி (சனிக்கிழமை ) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 31 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சப்ளை தடை செய்யப்படும். அந்த இடங்கள் வருமாறு:- கழுகுமலை உபமின் நிலையம்: கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, […]
தமிழ்நாடு விளை யாட்டு மே ம்பாட்டு ஆணை யத்தின் மூலம் 16 வயது முதல் 35 வயது உள்ள பெ ண்களுக்கான ‘முதலமைச்சர் விளையாட்டு திருவிழா’இது நம்ம ஆட்டம் 2026’ ஒன்றிய அளவிலான விளை யாட்டுப்ப ோட்டிகள் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அதிக அளவில் கலந்து கோண்டு கேரம் இரட்டையர் பிரிவில் முதலிடம், கையுந்து பந்து விளை யாட்டில் இரண்டாம் இடம், […]







