• March 6, 2026

செல்போன் பறிப்பு: 3 மாதத்திற்குள் விசாரணை முடிந்து குற்றவாளிக்கு தண்டனை அறிவிப்பு

 செல்போன் பறிப்பு: 3 மாதத்திற்குள் விசாரணை முடிந்து குற்றவாளிக்கு தண்டனை அறிவிப்பு

மாதிரிப்படம்

தூத்துக்குடியைச் சேர்ந்த திருநம்பி  வசந்தகுமார் (வயது 20) என்பவர் கடந்த 9.11.2025 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை தாக்கி அவர் அணிந்திருந்த அணிகலன்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து வசந்த்னகுமாரை தேடி கண்டுபிடித்து கைது செய்தன்ர்,. பின்னர் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் – 11 ல் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி (பொறுப்பு)  விஜயராஜ்குமார் விசாரித்து திருநம்பி  வசந்தகுமார் குற்றவாளி என தீர்ப்பளித்து 3 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ 500/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கில் சம்பவம் நடந்த தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில், புலனாய்வு செய்த முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர். கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய காவல்துறையினரையும், அப்போதைய முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகலட்சுமி மற்றும் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஜானகி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் பாராட்டினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *